Wednesday, February 28, 2007

இஸ்லாமிய விமர்சனங்களின் இணையத் தாக்கம்

கூகிளில் முயன்றவை:

இஸ்லாம் என்று தமிழில் உள்ளிட்டால் முதல்பக்கத்திலேயே ஐந்தாவது லிங்காக எனது இஸ்லாமிகின்ஃபோ பதிவு வருகிறது. முதல் பக்கத்தில் வந்துள்ள பதிவுகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பதிவுகளில் எனது தாக்கம் இருக்கிறது.

இஸ்லாம்+இந்து+கிறித்துவம் என்று கூகிளிட்டால் முதல்பக்கத்திலேயே எனது இஸ்லாமிகின்ஃபோ பதிவு வருகிறது. முதல் பதிவாக தருமி அவர்களின் பதிவு வருகிறது.

தீவிரவாதம் என்று கூகிளிட்டால், முதல் பக்கத்தில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் இஸ்லாம் பற்றிய விஷயங்களே வருகின்றன. இதில் ஜடாயு அவர்கள் எழுதியிருப்பது, எனக்கு அபூ முஹை அவர்கள் பதிலளித்திருப்பது போன்றவையும் அடங்கும்.

இஸ்லாம்+வன்முறை என்று கூகிளிட்டால், முதல் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 40% எனது பதிவுகளோ அல்லது எனக்கு பதில் தருகிறேன் என்று எழுதியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகளோ வந்து விழுகின்றன.

இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூகிளிட்டால், முதல்பக்கத்திலேயே கால்கரி சிவா, ஜடாயு போன்றவர்கள் எழுதியுள்ளது மற்றும் வேறு பலரும் செய்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த விமர்சனங்கள் வருகின்றன.

நபிகள் நாயகம் என்று கூகிளிட்டால் இரண்டாவது பக்கத்திலேயே எனது பழைய பதிவான islaam.blogdrive.com வந்து விடுகிறது. மேலும், எனக்கு பதில் சொல்லும் இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகளும் வந்துவிடுகின்றன.

முகமது என்று கூகிளிட்டால், முதல் பக்கத்திலேயே கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் எனது பதிவுகள், விவாதங்கள் வந்துவிடுகின்றன.

பர்தா என்று கூகிளிட்டாலும் முதற்பக்கத்திலேயே எனது, எனக்கு பதிலளித்திருப்போரின் பதிவுகள் வந்து விடுகின்றன.

இஸ்லாம்+பெண்ணடிமை என்று கூகிளிட்டால், முதல் பக்கத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எனது அல்லது எனக்கு பதிலளித்திருப்போரின் பதிவுகளே. நண்பர் ஆரோக்கியம் அவர்களின் பதிவும் முதல் பக்கத்திலேயே வருகிறது.

இஸ்லாம்+காட்டுமிராண்டித்தனம் என்று கூகிளிட்டால், முதல் பக்கத்திலேயே எனது பதிவுகள், மயூரனின் பதிவு, எனக்கு பதிலளித்து எழுதியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களின் பதிவுகள், நண்பர் வஜ்ரா சங்கரின் பதிவு போன்றவை வருகின்றன.

இஸ்லாம்+பிற்போக்கு என்று கூகிளிட்டால் முதல் பதிவாக நண்பர் சிவா என்னை விமர்சித்து எழுதியது வருகிறது. நண்பர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பதிவும் வருகின்றது.

மெக்கா என்று கூகிளிட்டால் நான் வஹி பற்றி எழுதியவையும், எனது புதிய பதிவான நேசமுடன் பதிவும் வருகின்றன. நண்பர் ஆரோக்கியம் அவர்களின் என்னமோபோ பதிவும் வருகிறது.

மதீனா என்று கூகிளிட்டால் எனது நேசமுடன் பதிவும், திண்ணையில் நான் எழுதியவையும் வருகின்றன. எனக்கு பதிலளித்து எழுத ஆரம்பித்த சகோதரர் அபூ முஹை அவர்களின் பதிவும் வருகின்றது.

இஸ்லாமிய கொடூரங்கள் என்று கூகிளிட்டால் நண்பர் எழிலின் பதிவு முதல் பக்கத்திலேயே வருகின்றது. வழக்கம் போல, நமது இணைய விவாதப் பதிவுகள் இங்கேயும் வருகின்றன.

Nesakumar என்று ஆங்கிலத்தில் கூகிளிட்டால், 70% எனது விஷயங்களே வருகின்றன. அனைத்தும் இஸ்லாம் சம்பந்தப்பட்டவை என்று சொல்லவும் வேண்டுமா?

நேசகுமார் என்று தமிழில் கூகிளிட்டால் 90% எனது , என் மீதான விமர்சனங்கள் குறித்த எழுத்துக்களே வருகின்றன. இவற்றுள் 90% நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாம் சம்பந்தப்பட்டவை.

***

இது கூகிள் தேடல் மட்டும்தான். மற்றபடி இன்று தமிழிலக்கிய உலகில் பலர் என்னை மேற்கோளிட்டு பேசுவதாக நண்பர்கள் கூறுகின்றனர். ஜெயமோகன் ஒரு முறை தாம் செல்லும் இடங்களில் எல்லாம் நேசகுமாரா நீங்கள் என்ற கேள்வி எழுகிறது என்றார். தமிழகத்தின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்றின் ஆசிரியர், "நேசகுமார் என்ன முன்னாள் முல்லாவா?" என்று நண்பர் ஒருவரிடம் கேட்டாராம். தமிழகத்தின் முன்னோடி இலக்கியப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரும், "யாரிந்த நேசகுமார்? அவர் இஸ்லாம் பற்றி எழுதுவது நன்றாக இருக்கிறது. ஆனால், முன்பிருந்தது போன்ற மென்மை இப்போது இல்லாமல் போய்விட்டது" என்றாராம். பிரபல தமிழ் வாரப்பத்திரிகையில் பணிபுரியும் ஒருவர் எனது எழுத்துக்களைப் படித்து ரசித்தேன் என்று பதிப்பாள நண்பர் ஒருவரிடம் சொல்லியுள்ளார்.

இதெல்லாம் சுயபெருமைக்காக எழுதவில்லை. யாராவது ஒருவர், கொஞ்சம் நேரம் செலவழித்து முயன்றால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது பாருங்கள். என்னை மேன்மேலும் எழுதத் தூண்டியவை இரண்டு மின்மடல்கள். ஒன்று சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தது. இரண்டாவது கத்தாரிலிருந்து வந்திருந்தது. இரண்டுமே என்னை மிரட்டின, இஸ்லாமிய பாணியில். ஒரு மடல் இந்து மதத்தை திட்டி வந்திருந்தது. எதோ நாகூர் ரூமி அவர்களுக்கு பதிலளித்தோம், சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு வேறு வேலையைப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை சீண்டிவிட்டது இந்த இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் தாம். அதில் ஒருவரின் விபரங்கள், புகைப்படம் முதற்கொண்டு சேகரித்து வைத்துள்ளேன்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களின் தீவிரவாதச் செயலால் உலகம் மருண்டுவிடும் என்று எண்ணுகின்றனர். அமைதியாய் தானுண்டு தன் வேலையுண்டு என்று போய்க்கொண்டிருக்கும் சாமான்யர்கள் சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டால் கூட இஸ்லாமிய தீவிரவாதம் தவிடு பொடியாகிவிடும் என்பதை அவர்கள் உணரவில்லை.

கோவையில் குண்டு வைத்தவர்கள், அவர்களது குடும்பத்தினரின் நிலை இன்று என்ன என்பது தெரியாதா? வீராப்பாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு தம்மையும், தமது குடும்பத்தாரையும் இவர்களே இழிவு படுத்திக் கொண்டார்கள். இன்று காஃபிர்களின் காலைப்பிடிக்காத குறையாய் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக்கொண்டுள்ளார்கள். இவர்களின் குழும்பத்தார்களின் நிலையோ இன்னமும் பரிதாபம்.

இந்நிலையில், அடிக்கடி வலைப்பதிவுகளில் சொல்வது போல, 'சொந்தச் செலவில் முழு சமுதாயத்துக்கே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்' இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள்.

இவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே ஒரு காஃபிர் வைத்தியர்தான் இவர்களைக் கவனிக்க வேண்டும். இவர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால் காஃபிர் ஆசிரியர்களிடம் தான் போகவேண்டும். வெளிநாடுகளில் குடும்பத்தை விட்டுவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் குடும்பத்தாருக்கு உறுதுணையாக அங்கே இருப்பது காஃபிர்கள் தாம்.

இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை, அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் இதே நிலைதான். உதாரணமாக பக்கத்திலிருக்கும் பாகிஸ்தானில் இன்று அமெரிக்க, சீன வழிநடத்துதல் இல்லையென்றால் நாடே உடைந்து கற்காலத்துக்கு போகவேண்டும் என்ற நிலை( அமெரிக்கா குண்டு போட்டு கற்காலத்துக்கு அவர்களைக் கொண்டுபோகத்தேவையில்லை).

முன்னேற்றத்தை தடுக்கத்தான் இவர்களால் முடியுமே தவிர, முன்னேற்றத்தை சுயமாகச் செய்து கொள்ள இவர்களால் முடியாது. முன்னேறிய இஸ்லாமிய நாடுகள் என்று நாம் கருதும் இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே காஃபிர்களின் தயவால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு மலேசியா, அங்கே சீனர்கள் இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரம் உடனடியாக அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். அமெரிக்கா தன்னுடைய கையை பின்னே இழுத்துக்கொண்டால் சவுதி உடனடியாக உடைந்து சிதறி ஆஃப்கானிஸ்தான் போன்றாகிவிடும்( அமெரிக்கா அதை இப்போதைக்கு செய்யாது என்பது வேறு விஷயம், வேலையே செய்யாமல் இப்போது பொருளீட்டிக் கொண்டிருக்கிறது அது சவுதி மூலமாக).

சவுதியோ வெளியில் வீராப்பாக பேசினாலும், தனியறையில் அமெரிக்க, யூத தலைவர்களின் முன்பு மண்டியிட்டு விழாத குறை. சவுதி அரச குடும்பத்தின் முதலீடுகள் எல்லாம் மேலை நாடுகளில் முடங்கிக் கிடக்கின்றன.

***

இந்த நிலையில் மீண்டும் மீண்டும் மிரட்டல்களையும் வீராப்பு வசனங்களையும், தத்து பித்தென்று கவிதைகளையும் எழுதி வரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கண்டு சிரிப்பே வருகிறது.

நான் இப்போது படித்து வரும் லெகசி ஆஃப் இஸ்லாம் நூலில் ஒரு விஷயத்தைக் காண்கிறேன். இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தைச் செய்தவர்கள் எல்லோருடைய குடும்பங்களும் சந்ததியே இல்லாமல் அழிந்து போயின. இஸ்லாமாவது தழைத்ததா என்றால் இல்லை. இஸ்லாம் இங்கே உருமாறிப்போய், இந்து மதத்தின் இன்னொரு பிரிவு என்று சொல்லும் வகையில் நசிந்து போய், இன்னமும் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு சவாலாக இருந்து வருகின்றது. மேலும் , எண்ணிக்கையின் பலத்தால் இந்த இந்துமயமான இஸ்லாம் உலக இஸ்லாமியர்களைத் தொடர்ந்து வீழ்த்தி வருகின்றது. ஆம், இவர்கள் மாற்றினேன் என்று நினைத்த இந்துக்களெல்லாம், இஸ்லாத்துக்குள் சென்று இஸ்லாத்தையே உருமாற்றி அழித்தார்கள். மேலுக்கு இஸ்லாம் போன்று தோன்றும் இந்த(இந்து) இஸ்லாம் இன்று ஒரிஜினல் இஸ்லாத்தினுள்ளே பலவிதங்களில் ஊடுருவி, சுற்றி வளைத்து முடக்கிப் போட்டுள்ளது என்பதை இவர்கள் உணரவில்லை, பாவம். இஸ்லாத்தை வெளியிருந்து நோக்கும் எனக்குப் புலப்படும் இந்த சிறிய விஷயம் கூட இவர்களுக்குப் புரியாமல் போனதுதான் பரிதாபம். அவர்களே அவர்களை அழித்துக் கொள்வது கூடத் தெரியாத அளவுக்கு மூடத்தனமும் , மூர்க்கமும் இவர்களது கண்களை மறைத்துவிட்டிருக்கிறது.

இப்படி அவர்களும் அழிந்து அவர்கள் சாதித்ததாக நினைத்ததும் அழிந்து போனதுதான் இந்த தீவிரவாதிகள் செய்த சாதனை. இதே விஷயம் மீண்டும் மீண்டும் உலகெங்கும் நடக்கின்றது.
ஈராக்கில் நான்கு லட்சம் பேச் செத்தார்கள், ஆஃப்கானிஸ்தானின் மூன்று லட்சம் பேர் செத்தார்கள் என்று அடுக்கும் அதே நபர், இப்படி அப்பாவி இஸ்லாமியர்கள் சாகக் காரணமாயிருந்தவர்களின் அதே பாணியை பின்பற்றுவதுதான் விந்தையிலும் விந்தை.

Stumble Upon Toolbar

6 comments:

Anonymous said...

http://www.islamundressed.com/

padichchu parunga unga aaraycchikku mElum uthavum

Anonymous said...

அய்யா, சற்று அடக்கி வாசிக்கவும். இப்பதான் தோழர் ஆரூரன் பதிவைத் தூக்கி விட்டதைப் பார்த்தேன். அவர் செய்த ஒரே தவறு ஈழத்தமிழனாய் இருந்து கொண்டு தன்னை இந்து என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டது. இங்கே சிலர் ****பையா என்றால் கூட சிரித்துவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் இந்து என்றால் ஆத்திரப்படுவார்கள்.

Anonymous said...

பாரதியை வைத்து இந்துமதத்தைத் தாக்க ஆசைப்பட்ட நல்லடியார் இங்கே சொசெசூ வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆத்தி சூடி யிளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற்
கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே"

"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;உய்வ தனைத்திலும்
ஒன்றாய் - எங்கும்ஓர்பொருளானது தெய்வம்"

"யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்"

என்று முஹம்மது நபி வலியுறுத்திய "லாஇலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ இறைக் கொள்கையைத்தான் பாரதியும் "பாருக்குள்ளே தெய்வம் ஒன்றே" என வழிமொழிந்துள்ளார்.

இப்படி எழுதி அல்லாவிற்கு இணைவைத்த பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருக்கும் நல்லடியாரை அந்த ஏக இறைவன் மன்னிப்பானாக!

Anonymous said...

நபிகள் நாயகம் - அன்னை ஜைனப் திருமணம் குறித்து நேசகுமார் தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். இந்த நீண்ட கடிதம் எழுதும்முன் எனது முந்திய திண்ணை கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருக்கலாம். இந்த விவாதத்தில் அவர் தரப்பு வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கின்றன. பொய்யை உண்மை என்று வாதிடுபவர்களுக்குத்தான் அதற்கான ஆதாரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. மாறாக, பொய்யை 'பொய்தான்' என்று சொல்வதற்கும் ஆதாரம் கேட்கிறார் நேசகுமார். நாம் அதற்கும் தயார்!

1. //ஹதீஸ்களிலும் தப்ஸீர் புத்தகங்களிலுமே இந்த 'கட்டுக்கதை' காணக்கிடைக்கிறது எனும்போது, எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்ற வாதத்தின் அடிப்படையே தகர்ந்து போகிறது.// என்கிறார் நேசகுமார். எனது முந்திய கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. இங்கு விவாதம் எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்பதல்ல. எது ஸஹீஹ் (ஆதாரபூர்வமான) ஹதீஸ், எது ஸஹீஹ் அல்ல என்பதுதான். இதை தெளிவுபடுத்துவதற்காகவே ஹதீஸ் பற்றிய சிறு விளக்கத்தை அளித்திருந்தேன். அது குழப்பவாதமோ, திசைதிருப்பும் முயற்சியோ அல்ல. (இந்த விவாதத்தில் ஷியாக்களைப் பற்றி நேசகுமார் பேச ஆரம்பிப்பதுதான் தெளிவான திசை திருப்பும் முயற்சி!)

2. ஒரு ஹதீஸ் ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு அதன் அறிவிப்பளர் வரிசை மிக முக்கியமானது. நேசகுமார் குறிப்பிடும் ஹதீஸ், ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு எந்த தகுதியும் அற்றது என்பதை எனது முந்திய கடிதத்தில் தெளிவு படுத்தியிருந்தேன். இது குறித்து, சகோதரர் அபூமுஹை தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.

http://abumuhai.blogspot.com/2004_12_01_abumuhai_archive.html

//முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்த எண்ணத்தை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுறுவி அறிந்தார்களா? அல்லது நபி(ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.//

இதற்கு நேசகுமாரின் பதில் என்ன?

3. நேசகுமார் கூறுகிறார், “இவ்விஷயத்தை பதிவு செய்த ஆரம்பக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக சோதித்து உண்மையென்று தம்மில் தெளிந்த பின்னரே பதிவு செய்து வைத்துவிட்டு சென்றிருக்கும் நிலையில்..”. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆதாரங்கள் நேசகுமாரின் கைவசம் இருக்கும் பட்சத்தில், இந்த நிகழ்வு ஒரு ஸஹீஹான ஹதீஸ்தான் என்று நிரூபிக்க நேசகுமாருக்கு எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை. (ஸஹீஹ் என்றால் என்ன என்பதற்க்கு எனது முந்திய பதிவைப் பார்க்கவும்) இதை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தால் அதை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்கப் போவதில்லை. நேசகுமார் செய்வாரா?

4. நேசகுமார் மேலும் கூறுகிறார், “...இதை கட்டுக்கதை என்று கூறும் மெளதூதியோ மற்றவர்களோ அம்முடிவை, தம்முடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்மொழியும்போது, அதற்கு வேறு ஏதும் சான்று பகராதபோது, இதை எம்போன்றவர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை.” நேசகுமாரின் இந்த கூற்றும் அடிப்படையற்றதே. இதில், மதப்பிடிப்புள்ள அறிஞர்கள் இந்த நிகழ்வு நபிகளாரை அவதூறு செய்வதாலேயே இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்ற கருத்து தொனிக்கிறது. ஒரு ஹதீஸ் ஒப்புக்கொள்ளப்படுவதற்கும், ஒப்புக்கொள்ளப்படாததற்குமான அளவுகோல், முன்பே விளக்கியதுபோல், அது ஸஹீஹ் ஆனதா, அல்லவா என்பதுதானே ஒழிய அது நபிகளாரை போற்றுகிறதா, தூற்றுகிறதா என்பதல்ல. நபிகளாரை அளவுக்கு அதிகமாக போற்றும் ஒரு ஹதீஸ் (“நபியே! உம்மை படைத்திருக்காவிட்டால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்” என்று இறைவன் அறிவித்தான் என்பது) ஆதாரமற்றது என்பதால், மதப்பிடிப்புள்ள மார்க்க அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

5. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு “ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே காணக்கிடைக்கிறது என்று தீவிர மதப்பிடிப்புள்ள முஸ்லிம்களே ஒப்புக்கொள்கிறார்கள்” என்று சொல்லும் அவர், இதற்கென ‘ரஹீக்’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் அப்புத்தகத்தில் 399-400 பக்கங்களில், மேற்குறிப்பிட்ட அந்த நிகழ்வு அப்பட்டமான கட்டுக்கதை என்றும் அதை இறைவன் எவ்வாறு தெளிவு படுத்தினான் என்றும் விளக்கப் பட்டிருக்கிறது.

அந்நூலிலிருந்து குறிப்பிட்ட அந்த பகுதி:

ஜைனப் (ரழி) நபி (ஸல்) திருமண விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்கர்கள் புனைந்தனர். அதவது, முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காக தனது மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக் கதையை அவர்கள் எந்தளவு பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக்கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ் அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகிறான்.

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)

6. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு ஆதாரமற்றது என்பதற்கு மேலும் ஆதாரங்கள்:

அல்லாமா ஷபீர் அஹமது உஸ்மானி அவர்களின் ‘த•ப்ஸீரே உஸ்மானி’ எனும் குர்ஆன் விளக்கஉரை நூலில் 33-ம் அத்தியாயத்தின் அடிக்குறிப்பு ஒன்று கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “..The legends which are described by the unauthentic historians at this place are rejected by Ibne Hajar and Ibne Kathir’

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்னு கஸீர் (Ibne Kathir) தனது விரிவுரை நூலில் நபிகளார் - அன்னை ஜைனப் திருமணம் நிகழ்ந்த சூழ்நிலையை விரிவாக விவாதித்திருக்கிறார். நேசகுமார் குறிப்பிடும் சம்பவம் அதில் இடம்பெறாததோடு, ‘இச்சூழலில் அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்கள் ஆதாரமற்றவை (ஸஹீஹ் அல்ல) என்பதால் அவற்றை புறக்கணிப்பதே சரி’ என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

7. “இச்சம்பவம் இப்னு சாதின் தப்காத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தால், அப்போதாவது நபிகள் நாயகமும் நம்மைபோன்று அல்லது நம்மைவிட அதிகமாக ஆசாபாசங்கள் உடையவரே என்பதை சலாஹ¤தீனும் மற்ற இஸ்லாமிய அன்பர்களும் ஒப்புக்கொள்வார்களா?” என்று நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன், ஒரு பதிவு அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம்பெற்றிருப்பதாலேயே ஆதாரபூர்வமானதாக ஆகிவிடாது. ஒரு ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது ஒப்புக்கொள்ளப்படும். நேசகுமார் தனது வாதத்தை ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை கொண்டு நிரூபித்தால் அதை எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதை நிரூபிக்க நேசகுமார் தயாரா?

8. “இம்மாதிரியான விவாதங்களிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் தமது மதத்தின் குறைபாடுகள் புலப்பட்டு, அது மத வெறியை தணித்தால் சமுதாயம் மிகவும் பயன்பெறும்.” என நேசகுமார் கருத்து தெரிவித்திருக்கிறார். விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் எப்படி இந்த ஒரு முடிவுக்கு வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. விவாதம் ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் ‘குறைபாடுகள் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை, அதை தவறாக புரிந்து கொண்டவர்களின் செயல்பாடுகளில்தான் இருக்கிறது’ என்பதை அவர் சரியாக புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

9. மற்றபடி, நேசகுமார் இவ்வாறு விவாதம் புரிவதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே! அவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அறிவதற்காக வேண்டியாவது பல நூற்களை படிக்கிறேன். மார்க்க அறிஞர்களுடன் பேசி தெளிவு பெறுகிறேன். இஸ்லாம் ஒரு தெளிவான வாழ்க்கை வழிகாட்டி என்ற என் நம்பிக்கை இன்னும் வலுப்பெற்று வருகிறது.

Nesa kumara, nalla islamic booksa refer pandreenga but unmaya mattum vilangave maateenga.... 6 - 1 = 5
hm parithaba padaratha thavira enaku onnum solla theriyala pa.. Braina vechu projanam illayae..... any way The Almighty will teach u the good lesson before u die. ..