Sunday, April 15, 2007

தமிழ்மணத்திற்கு சில வார்த்தைகள்.....

முதலாவதாக எனது பதிவை உங்கள் திரட்டியிலிருந்து தாராளமாக நீக்கிக் கொள்ளுங்கள். இப்பதிவில் இங்கே நான் எழுதும் எதுவும் உங்களிடம் எனது பதிவை உங்களது திரட்டியில் காண்பியுங்கள் என்று இறைஞ்சுவதற்காக அல்ல. கண்மூடித்தனமாக உங்களது செயல்களைக் குறித்த எனது பார்வையைப் பதிவு செய்ய மட்டுமே.



***

நான் பதிவுகளுக்கென்று கொடுத்த முக்கியத்துவத்தை நீக்கி நெடுநாட்களாயிற்று. ஒரு நூறு - நூற்றைம்பது நபர்கள் படிப்பதற்காக எனது நேரத்தை செலவிட இயலாது என்று முடிவெடுத்து, இப்போதெல்லாம் எனது பதிவுகளை - நான் இணைய இதழ்களில் எழுதுபவற்றை சேமிக்கும் இடமாக, நான் படித்தவற்றை - பார்த்தவற்றை பதிந்து வைத்துக் கொள்ளும் இடமாக, குறிப்பெடுத்துள்ளவற்றை சேகரித்துக் கொள்ளும் இடமாகத்தான் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் அரிதாகவே எதாவது சிறிது எழுதுகிறேன்.


பதிவே இந்த நிலை எனும்போது திரட்டிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எந்த திரட்டியையும் நம்பி இன்று யாரும் இல்லை. தேன்கூடு, தமிழ்மணம், டெக்னோரட்டி, சில மென்பொருள்கள், பையர்பாக்ஸ் உலாவியில் பிடித்த பதிவர்களின் பதிவுகளை படிப்பது, இந்த திரட்டிகளில் தெரியுமுன்பே நமக்கென உருவாக்கியுள்ள பர்சனல் திரட்டியாக ஃபையர்பாக்ஸை உருவாக்கிக் கொள்வது , யாஹூவின் பைப்ஸ் என்று விரிந்து பரந்து கிடக்கிறது இந்த திரட்டிகளின் உலகம். மற்ற மொழிகளிலோ பெரிதாக அறியப்படாத திரட்டிகள் எதுவுமே இல்லாத நிலையிலும் பதிவுலகம் மிகவும் ஆரோக்கியமாக, அசுர வேகத்துடன் விரிவடைந்து கொண்டே உள்ளது.


மாறி வரும் இணையநுட்பங்கள், எந்தவொரு தனிமனிதரும் கருத்துப் பரிமாற்றங்களை மோனோபலைஸ் செய்ய முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் மாற்றங்களைக் கொண்டு வந்து அதிகார பரவல் என்பதையும் தாண்டி தனிமனிதனின் கரத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிக்கின்றன. பெரும் அரசுகளே இதில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிற நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது.


இந்நிலையில், இங்கே ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, தமிழ்மணத் திரட்டியையே உலகமாக நினைத்து கனவு கண்டு, இந்த சண்டைகள் - சச்சரவுகள் - பின்னூட்டங்கள் இப்படி ஒரு மாய உலகில் முகிழ்ந்து மகிழ்ந்து கொண்டு இருப்பதை பெரிய விஷயமாய் நினைத்தீர்களேயானால், தாராளமாக கண்ணை மூடிக் கனவு காணுங்கள்... இணைய உலகம் மட்டுமல்ல உலகமும் தன்வாக்கிலேயே போய்க் கொண்டே இருக்கும். யாருடைய கருத்தையும், கனவுகளையும் யாரும் அணைபோட்டு தடுத்துவிட முடியாது.


இந்தப் பதிவை எழுதியபோதுதான் நண்பர்கள் கேட்டார்கள், இந்தப் புதிய (நேசமுடன்) பதிவை தேன்கூட்டில் இணைக்கவில்லையா என்று. நான் இணைக்கவில்லை. அது போன்றே, தமிழ்.நெட்டில் யாரும் இணைத்தார்களா என்று தெரியவில்லை, நான் இணைக்கவில்லை. ஆனால், அங்கே தெரிகிறது என்பது அங்கிருந்து வந்து என் பதிவைப் படித்தவர்கள் சொல்லிய பின்புதான் தெரிந்தது.தமிழ்மணத்தில் கூட நண்பர் ஒருவர் வற்புறுத்திக் கேட்டு எனது கடவுச்சொல்லை வாங்கி தமிழ்மண நிரலை இந்தப் பதிவில் இணைத்தார். பின்பும் நானாக முயன்று எனது எந்த பதிவையும் சேர்த்ததோ வகைப்படுத்தியதோ இல்லை. இன்றுவரை பின்னூட்ட பகுதியில் எனது பதிவு தட்டுப்படுகிறதா என்று கூட நான் தேடியதில்லை, கவலைப்பட்டதுமில்லை. தேவைப்பட்டால் நீங்களே ஐபியெல்லாம் கூட பார்த்து இது சரியா தவறா என்று தெரிந்து கொள்ளலாம்.


நான் பெரிய ஆள், தமிழ்மணம் சிறியது என்று வசைபாடுவதற்கு இதையெல்லாம் சொல்லவில்லை. தமிழ்மணத்திரட்டியில் என் பதிவு தெரிவதனால் நான் பெறுவது ஒன்றுமில்லை - இந்த குழு அரசியலில், ஒருவரை ஒருவர் முதுகில் குத்திவிட்டு மார்தட்டிக் கொள்ளும் குஸ்திகளில் எனக்கு ஆர்வமில்லை. எழுதுவதில் கூட ஒரு சோர்வு தட்டிவிட்டது என்பதே உண்மை. இந்நிலையில், தமிழ் சினிமா பாணியில் 24 மணிநேர அவகாசம் தருகிறோம் மன்னிப்பு கேள் என்றால்.....


***


நண்பர்களே, நீங்கள் ஒரு திரட்டியை நேரம் செலவழித்து, அட்மினிஸ்டர் செய்து வருகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள். உண்மைதான், எழுதும் எனக்கே இவ்வளவு அயர்சி இருந்தால், இப்படி ஒரு திரட்டியை காசியிடமிருந்து பெற்று, அதன் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டு, மேலும் பட்டை தீட்ட எவ்வளவு நேரம் செலவாகியிருக்கும், செலவாகும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, இதில் உங்களது தியாகம், உங்களது குடும்பத்தாரின் தியாகங்களும் அடங்கியிருக்கின்றது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.


ஆனால், இதற்காக இதை எதோ அமானுஷ்ய விஷயமாக நீங்கள் கற்பனை செய்துகொண்டு, நாங்கள் எல்லாம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்ட, உங்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி கேள்வியே கேட்காத செக்கு மாடுகளாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், மன்னியுங்கள்.


***


நான் ஆதாரத்தை தரவேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். எந்தவிதமான ஆதாரத்தைக் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை. நான் தமிழ்மணம் ஜெயராமனின் ஐபிக்களை கசியவிட்டது என்று வந்த செய்தியைப் பற்றி எழுதி, இது போன்ற தகவல்கள் தடுமாறவைக்கின்றன, தெளிவு படுத்துக்கள் என்று வேண்டுகோள் தானே விடுத்திருந்தேன். அதுவும் நிலைமையைப் பற்றி எழுதி, இவ்வளவு சீரியஸாக ஆகியபின்பு கவலை ஏற்படுகிறது, 'தயவு செய்து' இதைத் தெளிவியுங்கள் என்றுதானே கேட்டிருந்தேன்?


தமிழ்மணம்தான் ரவுடிகளிடம் ஜெயராமனின் ஐபியைக் கொடுத்து பிளாக்மெயில் செய்ய உடந்தையாயிருந்தது என்று எழுதினேனா? இல்லையே. பிளாக்மெயில் செய்த கும்பல் தமிழ்மணத்திலிருந்து ஐபியைப் பெற்றோம் , திலகவதி ஐபிஎஸ் என்றெல்லாம் சொல்லி மிரட்டியது என்று எனக்கு வந்த தகவல்களைத் தானே குறிப்பிட்டேன்?


இப்படிப் பட்ட தகவல்களால் கவலைகொண்டு, மற்றவர்களைப் பொன்று தனிமடல்களில் புலம்ப மறுத்து வெளிப்படையாக கேள்விகளைக் கேட்ட என்னை ஆதாரம் கொடு, 24 மணி நேரம் டைம் தருகிறோம் இல்லையென்றால் என்று விழிகளை உருட்டி மிரட்டுவது சிறுபிள்ளைத்தனமாயில்லை? ஆதாரம் என்றால் எதைக் கேட்கிறீர்கள்? இப்படி எனக்கு வந்த மடல்கள் குறித்து கேட்கின்றீர்களா? அந்த மடல்களின் ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிடவா? அப்படி வெளியிட்டால், நீங்கள் பதிலுக்கு மன்னிப்பு கேட்பீர்களா? என்ன சிறுபிள்ளைத்தனமான சவடால் அய்யா?


பின்னூட்டங்களை ஏன் வெளியிட்டீர்கள் என்றால், அது ஆபாச வார்த்தைகளைக் கொண்டிருக்காதவரையில் அனுமதித்தே வந்திருக்கின்றேன். எனது பழைய பதிவுகளைப் பார்த்தீர்களென்றால், என்னை மிகவும் கேவலமாகத் திட்டி வந்த சில பின்னூட்டங்களைக் கூட - இதுதான் இன்றைய நமது சமூகத்தின் பக்குவம் என்று படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளட்டும் என்றே வெளியிட்டு இருக்கின்றேன். எனது மதம், நாடு, சமூகம் என்று எல்லாவித விமர்சனங்களையும் அனுமதித்தே வந்திருக்கின்றேன். இந்நிலையில் வருகிற பின்னூட்டத்தையெல்லாம் உங்களிடம் காட்டி ஒப்புதல் வாங்கிவிட்டு வெளியிட வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது தவறு. உங்கள் குழுவில் உள்ள நபர்களுடன் தனிப்பட்ட முறையில் வேறுபட்டு சண்டையிட்டு வந்த சிலரது பின்னூட்டங்களை நான் வெளியிட்டதுதான் உங்களது எரிச்சலுக்குக் காரணம் என்று யூகிக்கிறேன். உங்களின் குழு அரசியலுக்குள் என்னை இழுக்காதீர்கள். இதோ உங்களின் பதிவில் என்னைத் தனிப்பட்ட முறையில் திட்டி வந்துள்ள பின்னூட்டங்களையெல்லாம் நீங்கள் அனுமதித்துள்ளீர்களே, அதற்காக உங்களை நான் கடிந்து கொள்ள முடியுமா? இதையெல்லாம் தாண்டி பரந்து பார்க்கும் பார்வை நமக்கு வேண்டும். குறிப்பாக ஒரு திரட்டியை, வலையிதழை நிர்வகிக்கும் உங்களுக்கு இருக்க வேண்டும்.



இதுதான் தமிழர்களின் எதிர்காலம் என்று நினைக்கும்போது தான் கவலையாய் இருக்கிறது. சற்றும் முதிர்ச்சியற்ற - சவடால் பேசும் இளைஞர்கள், அவர்களைத் தட்டிக் கொடுக்கும் பெரியவர்கள் என்று எங்கே நமது சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது என்ற கவலை ஏற்படுகிறது.


தமிழ்மண புதிய நிர்வாகிகள் குழுவில் சில ஈழத்தமிழர்கள் இருப்பதைக் கவனித்தேன். மேலும் ஒரு சிலரும் தீவிரத் தமிழ் தேசியவாதிகள் என்று நண்பர்கள் சொன்னார்கள். என்னைப் பற்றி எழுதியது பெயரிலி ரமணீதரன் என்றும் சொன்னார்கள். யார் எழுதியிருந்தாலும் அது பெயரிலி மட்டுமென்றாலும் பிரச்சினையில்லை அல்லது கார்த்திக் ரமாஸ், தங்கமணி, சங்கர பாண்டி என்று யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் இவர்களது எழுத்துக்கள் கருத்துக்கள் பற்றி ஓரளவு அறிவேன். இவர்கள் இணைய ஊடகத்தில் தொடர்ந்து இந்திய இறையான்மைக்கு எதிராக ஓலமிட்டு வருகின்ற, அப்பட்டமான இந்திய வெறுப்பை முன்னிறுத்தி அதற்காக ஜிகாதி ஆதரவாளர்கள், பிராம்மண வெறுப்பாளர்கள், இந்து மத வெறுப்பாளர்கள், நக்ஸல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தனித்தமிழ்நாடு கேட்கும் தீவிரவாதிகள் என்று எல்லோரையும் ஒருங்கிணைக்க பூங்கா , தமிழ்மணம் போன்றவற்றை பயன்படுத்தி வருவதையும் அறிவேன்.


இங்கே ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்படிப் பட்ட முதிர்ச்சியற்ற , இந்திய எதிர்ப்பு, பிராம்மண வெறுப்பு, இந்து எதிர்ப்பு அரைவேக்காட்டு இந்தியத் தமிழக் குழுக்களுடன் சேர்ந்து செயல்பட்டதால் தான் இன்று ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு செய்து வரும் சிங்கள பேரினவாத அரசு பற்றி தமிழ்நாட்டிலோ மத்தியிலோ பேசினால் கூட எம்மை தேசத்துரோகிகளைப் போன்று பார்க்கின்றார்கள். இவர்களெல்லாம் தமிழர்களுக்கு என்று சாதித்தது வெற்றுச் சவடால்கள் மட்டும்தான். ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களக் கடற்படையால் சுட்டுத்தள்ளப்படும் இந்தியத் தமிழர்களுக்குக் கூட இவர்கள் சாதித்தது ஒன்றும் கிடையாது. ஏன், இவர்கள் போய் ஈழத்தில் போரிட வேண்டியதுதானே? தமிழ்நாட்டிலேயே இருக்கிற அவலங்களுக்காக தமது வாழ்வைத் தாரை வார்க்க வேண்டியதுதானே? எதையும் செய்யாமல், ஈழத்தமிழர்களின் மீதமர்ந்து சவாரி போக நினைக்கும் மணல் குதிரைகள் இவர்கள். இவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஈட்டித்தந்தவைகளைக் காட்டிலும், நாசமாக்கியதே அதிகம். அதனால், இந்தக் கூட்டணி பற்றிய கேள்விகள் எனக்கு உண்டு, எழுத நினைத்து வழக்கம் போல இதையெல்லாம் எழுதாமலேயே விட்டுவிட்டேன்.



அதே போன்று, பிராம்மணர்களை விமர்சிப்பது வேறு, எனக்கும் கூட சில விமர்சனங்கள் உண்டு, இட ஒதுக்கீட்டை ஆதரித்து, தமிழ் பிராமணர்களை விமர்சித்து இங்கே தமிழ்மணத்துக்கெதிராக பின்னூட்டமிட்டுள்ள நண்பர் திருமலையுடன் சில வாரங்களுக்கு முன்பு ஒரு குழுவில் காரமான விவாதத்தைக் கூட நான் நிகழ்த்தினேன் . ஏன், வன்னியர்கள், தேவர்கள், நாடார் என்று ஒவ்வொரு சாதியின் மீதும் விமர்சனங்கள், புறம்பேசல்கள் தமிழ்நாட்டில் உண்டு. கள்ளநோட்டடித்தது இந்த சாதி, கலப்படம் செய்து முன்னேறியது இந்த சாதி, கள்ளச்சாராயம்-கட்டபஞ்சாயத்து என்று ரவுடித்தனம் செய்வது இன்ன சாதி என்ற தூற்றல்கள் உண்டு. ஏன், ஒரு சாதிக்குள்ளேயே பிரிவுகளில், புறம்பேசல்கள் உண்டு. ஒரே சாதிப்பிரிவில் வட்டார ரீதியான கிண்டல்கள், சித்திரப்படுத்துதல்கள் உண்டு. ஆனால், இப்படிப்பட்ட விமர்சனங்கள் வேறு, அப்பட்டமான இன அழிப்பை - பிராம்மண எதிர்ப்பு என்ற பெயரில் செயல்படுத்துவது வேறு. இப்படிப்பட்ட கும்பல்கள்களோடு தமிழ்மணம் மற்றும் ஈழத்தமிழர்கள் கைகோர்த்து செயல்படுவது நாளை இதே இன அழிப்பை செய்ய முற்படும் சிங்கள-பவுத்த பேரினவாத அரசின் செயல்களை தட்டிக் கேட்கக் கூட தார்மீக உரிமை இல்லாதது போன்ற நிலையை ஏற்படுத்திவிடும். பார்ப்பான் எல்லோரையும் கவிழ்த்தான் என்று இந்தக் கும்பல்கள் சொல்வதைத்தான் சிங்கள-தேரவாத பவுத்தம் தனது மகாவம்ச-குலவம்ச-தீபவம்சங்களின் மூலம் தலைமுறை தலைமுறையாக சொல்லி மூளைச்சலவை செய்து வருகின்றது. பாம்பையும் பாப்பானையும் ஒப்பிடும் அதே பாசிஸ கோஷம்தான், துத்தகமனுவிடம் அருகர்களை அனுப்பி 'நீ கொன்ற தமிழர்கள் எல்லாம் மனிதர்களே அல்ல, அவர்கள் விலங்குகள்' என்று சொல்ல வைத்தது, யக்கர்கள் என்று தமிழர்கள் மீது மீண்டும் மீண்டும் இனவெறுப்பை ஊட்டியது. இரண்டிற்கும் அடிப்படையில் வித்தியாசம் ஒன்றுமில்லை. பிராமண வெறுப்பு என்பது தமிழ் சமுதாயத்தின் மனநோய் என்று கருதும் அளவிற்கு இன்று நிலைமை முற்றிப்போய் இருக்கிறது. இந்த அப்பட்ட, மனச்சிதைவுக்கொப்பான பிராம்மண வெறுப்பை institutionalize செய்யும் விதத்தில் தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகள் செயல்படுவது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்று நினைக்கின்றேன்.


அது போன்றே அப்பட்டமான இந்திய எதிர்ப்பு அணுகுமுறையும் இங்கே பூங்கா எனும் வலையிதழின் மூலம் institutionalize செய்யப்பட்டு வருவதைப் பார்க்கின்றேன். இந்த வட்டாரத்தில் ஓரளவுக்கேணும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மனித உரிமை தருவது இந்த இந்திய அரசு - அரசியலமைப்பு - கட்டமைப்பு மட்டுமே. இதில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. வாச்சாத்தியில் கற்பழித்தவனும் தமிழன், காவல் துறையைச் சேர்ந்தவன் என்பதால் தமிழ்நாடு அழிய வேண்டும் என்று சொல்வோமா? மூன்றாம் உலக நாடுகளுக்கே இருக்கக் கூடிய பிரச்சினைகள் அனைத்தும், அதிலும் ஏழ்மையும் கூட சேர்ந்து கொண்ட நிலையில் இன்னும் அதிகமாகவே இந்தியாவுக்கு உண்டு. ஆனால், இதையும் மீறி இந்த தேசத்தில் தான் இந்தப் பிரதேசத்திலேயே அதிக அளவு சுதந்திரம் - எல்லா தளங்களிலும் , உண்டு. இந்தியாவே தெற்காசியாவின் நம்பிக்கை ஒளியாக இன்று விளங்குகின்றது. இது என்னுடைய நாடு என்பதால் மட்டும் சொல்லவில்லை, இந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் என் குடும்பமும் தியாகங்களைச் செய்துள்ளது என்ற உணர்ச்சி மேலிட சொல்லவில்லை. இதோ இலங்கையில், சொந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக விண்ணிலிருந்து கார்பெட் குண்டுகளைப் பொழியும் இலங்கை எங்கே - எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் ஹெலிகாப்டர் கன்ஷிப்களைக் கூட காஷ்மீரில் தவிர்த்து ஜிகாதிகளை எதிர்கொள்ள முயலும் இந்தியா எங்கே. இந்நிலையில் இந்தியாவின் காஷ்மீரை ஈழத்தோடு ஒப்பிடுவது, இந்தியாவை மட்டும் தாக்குவதாகாது, ஈழத்தமிழர்களின் துயர் பற்றிய முற்றிலும் எதிர்கருத்தை, பிம்பத்தை இந்திய - உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும். இதை அறியாமல், முதிர்ச்சியற்ற தமிழர்கள் சிலர் செய்து வருகின்றனர். இது போன்ற குழுக்களோடு தமிழ்மணத்தின் இன்றைய நிர்வாகிகள் பலர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனம் வேறு, அதை ஒரு சனநாயக நாட்டில் செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால், இந்திய இறையான்மையை சிதைக்க முற்பட்டு வரும் குழுக்கள், அந்நிய கைக்கூலிகளுக்கு உதவி செய்வது அவர்களுக்கு தளம் ஏற்படுத்திக் கொடுப்பது வேறு. முஸ்லீம் நாடுகள் உட்பட உலகமே இன்று ஒதுக்கித் தள்ளும் ஜிகாதி குழுக்கள் ஒருபுறம், உலகமே நிராகரித்த நடைமுறைக்கொவ்வாத மாவோயிஸ்டு குழுக்கள் மற்றொருபுறம், மூடத்தனமான பிராமண எதிர்ப்பை - இந்திய எதிர்ப்பாக மாற்றிக்கொண்டு அதைத் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலோடு சம்பந்தப்படுத்தி பிரச்சாரம் செய்யும் குழுக்கள் என்று எல்லோருமாய் சேர்ந்து கொண்டு இந்தியாவை சிதறடிக்க நினைப்பதை, அந்தப் பிரச்சாரத்துக்கு தமிழ்மணம் பயன்படுத்தப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருக்க முடியவில்லை. தமிழ்மணத்தில் இருப்பவர்கள் அமெரிக்காவில், கனடாவில் இருப்பதால் இதெல்லாம் தங்களைப் பாதிக்காது என்று கனவு காண வேண்டாம். முன்பிருந்த நிலை வேறு, இன்று இந்தியாவின் நிலை வேறு.இன்றைய geo politics வேறு. உலகமே இந்த அடிப்படைவாதக் குழுக்களோடு பெரும் சமர் செய்துவருகின்றது. இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டு இந்தப் போரின் முக்கிய அங்கமாக விளங்கிவருகிறது, இந்நிலையில் முழுகும் கப்பலில் ஈழத்தவர்களையும், ஏனைய தமிழர்களையும் ஏற்றிவிட முயலும் இந்த முயற்சியைக் குறித்த எனது எதிர்ப்பைத் தெரிவிப்பதை ஒரு தமிழன் என்ற முறையில் எனது தார்மீகக் கடமையாக நினைக்கின்றேன்.


இதையெல்லாம் மீறியும், தமிழ்மணத் திரட்டியின் செயல்பாடுகளைப் பற்றி எனக்கு அதீத விமர்சனம் ஏதுமில்லை. ஆனால், தமிழ்மணத்தை இன்று நடத்துகின்றவர்களின் மன முதிர்ச்சி பற்றி , அவர்களது நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்துள்ளது. நான் ஏற்கனவே எழுதியிருந்தது போன்று ஒரு முறை காசி அவர்களிடம் கூட இது போன்றதொரு சந்தேகத்தை கேட்டேன். அவர் கொடுத்த பதில் திருப்தியாயிருந்தது. அவரது நிதானம், குழு அரசியல்களில் ஈடுபடாமை அந்த நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், தமிழ்மணத்தை இன்று நடத்துபவர்கள் பற்றி எனக்கு ஐயம் ஏற்பட்டது, பெயரிலி ரமணீதரன் மீதோ, சங்கர பாண்டி அல்லது கார்த்திக் ரமாஸ் என்று யாருடனோ எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் இல்லை. சுட்டிக்காட்டியதற்குக் காரணம், 'ஜெயராமன் விஷயத்தில் தமிழ்மணம் ஐபிக்களை சைக்கோ மூர்த்திக்கு கொடுத்தது, மூர்த்தியை அடியாள் போன்று வைத்துக் கொண்டு தமிழ்மணத்திரட்டியிலிருந்து தமக்கு பிடிக்காதவர்களை, இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்களை விரட்டுகிறார்கள'் என்று தொடர்ந்து வந்த தகவல்கள், மடல்கள் தான். இவற்றை நிரூபிப்பது போன்றே தமிழ்மணத்தின் செயல்பாடுகளும் சமீப காலமாகவே இருந்து வந்தது. இதை மற்றவர்கள் போன்று மனதில் வைத்துக் கொள்ளாமல் நேரடியாகக் கேட்டேன்.


இதற்கு விளக்கம் தருவது இயல்பான விஷயம். இல்லையேல் முடியாது , வேண்டுமானால் திரட்டியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அதை விடுத்து இப்போது மணி இத்தனை, 24 மணி நேரம் அவகாசம் தருகிறோம், மன்னிப்பு கேள் என்றெல்லாம் சவடால் விடுவது, இப்படி ஒரு திரட்டியை நிர்வகிப்பவர்களுக்கு அழகல்ல. உங்களிடம் மன்னிப்புக் கேட்டு இந்தத் திரட்டியில் என் பதிவுகள் தெரிந்தால் தான் எனக்கு வாழ்க்கை என்ற நிலையில் இருந்தால் கூட நான் கேட்கமாட்டேன். என் எழுத்துக்களைப் படிப்பவர்கள் தொடர்ந்து வந்து படித்து வருகின்றார்கள். இது வரை குறைந்த பட்சம் அரைடஜன் பதிவுகள், தளங்களில் எழுதியுள்ளேன். எனது ஏராளமான கட்டுரைகள் உலகத்தமிழர்களை பல தளங்கள் மூலமும் இணைய இதழ்கள் மூலமும் சென்றடைந்து கொண்டுள்ளன. இன்றும் எனது எழுத்துக்கள் தரவிறக்கம் செய்யப்படுவதை பார்க்கிறேன்.எனக்கு எழுதத்தான் நேரமில்லையே தவிர, எனது எழுத்துக்களைப் படிக்க, என்னுடன் நட்பு பாராட்ட உலகம் முழுவதும் ஏராளமான தமிழர்கள் இருக்கின்றார்கள். யாருமே படிக்கவில்லை, அனைவரும் என்னை புறக்கணிக்கின்றார்கள் என்றால் கூட வேண்டும் என்றால் நான் நம்பும் கருத்தை வெளியிட்டுக் கொண்டே இருப்பேன். இதில் இருக்கிற திரட்டிகளில் ஒரு திரட்டில் என் பதிவு தெரியாததால் எனக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடப்போகிறது? அல்லது என் எழுத்துக்களைப் படிக்க விரும்புவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் நேர்ந்து விடப் போகிறது? ஒன்றும் கிடையாது.


உங்களுக்கு அட்வைஸ் செய்ய நான் பெரிய அறிஞன் எல்லாம் கிடையாது. ஆனால், உங்களுடைய தவற்றை இடித்துரைப்பது , கெடுப்பாரில்லாமல் தானே கெடும் ஆள்வோனுக்கு சொல்வதைச் சொல்லி வைப்போம் என்றுதான். இதையெல்லாம் எடுத்துக் கொள்வதும் ஏற்காததும் உங்களிஷ்டம்.


கடைசியாக, பலவித இடைஞ்சல்களுக்கு இடையே எனது பதிவுகளை தொடர்ந்து தமிழ்மணத்தில் அனுமதித்து பலர் எனது எழுத்துக்களை - கருத்துக்களை அறிந்து கொள்ளச்செய்த தமிழ்மணத்தை உருவாக்கிய காசி ஆறுமுகம் அவர்களுக்கும், சற்றே மனம் தளர்ந்திருந்த காலங்களில் என்னை சப்போர்ட் செய்து என்னை பலவிதங்களிலும் ஊக்குவித்த மதி கந்தசாமி அவர்களுக்கும் - அவர்கள் இன்று இந்த தமிழ்மணத்தில் இல்லையென்றாலும், என் உளங்கனிந்த நன்றிகள்.


அன்புடன்,

நேசகுமார்.

Stumble Upon Toolbar

13 comments:

Anonymous said...

we r behind u and ready boycot tamizmanam. the quality of blogs are heading towards ?????????. ood post and gd bye to tamizmanam

ILA(a)இளா said...

இவை விவாதத்திற்கு மட்டுமா இல்லை உங்கள் முடிவா?
முடிவென்றால், இந்த பின்னூட்டத்தினை வெளியிடவேண்டாம்.

Anonymous said...

தமிழ்மணம் என்பது ஒரு குப்பை மேடு. உங்கள் முடிவுக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

லக்கிலுக் அவர்கள் மேல் அவர் வேலை பார்க்கும் இடத்தில் புகார் கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறோம்

Lankan tamil said...

"The only way evil can triumph is when good people do nothing."

You are one of the few good people in Tamil blogsphere.

Even if those people leading a simple blog aggregator remove you from the list.
We all are with you.

Vajra said...

//
இங்கே ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, தமிழ்மணத் திரட்டியையே உலகமாக நினைத்து கனவு கண்டு, இந்த சண்டைகள் - சச்சரவுகள் - பின்னூட்டங்கள் இப்படி ஒரு மாய உலகில் முகிழ்ந்து மகிழ்ந்து கொண்டு இருப்பதை பெரிய விஷயமாய் நினைத்தீர்களேயானால், தாராளமாக கண்ணை மூடிக் கனவு காணுங்கள்... இணைய உலகம் மட்டுமல்ல உலகமும் தன்வாக்கிலேயே போய்க் கொண்டே இருக்கும். யாருடைய கருத்தையும், கனவுகளையும் யாரும் அணைபோட்டு தடுத்துவிட முடியாது.
//

சத்தியமான உண்மை. கிணற்றுத் தவளைகளுக்கு கடலின் அருமை தெரியாது.

உங்கள் பதிவுகள் படிப்பதற்கென்றே வாசகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் விமர்சனங்களையும் பதிவுகளையும் தமிழ் சிஃபி, திண்ணை இன்னும் பல இணைய இதழ்களில் வெளியிடுங்கள். அதுவே முன்னேற்றத்திற்கான பாதை.

உங்கள் சிண்டிகேஷனை சப்ஸ்கிரைப் (RSS feed) செய்துள்ள என்னைப் போன்றவர்களுக்கு தமிழ்மணத்தில் பார்த்துத் தான் உங்கள் பதிவு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.

Anonymous said...

The kind of language that these sewer rats use and the kind of hatred they show for a community - is this also seen at work-places in tamil nadu?

Anonymous said...

நேச குமார்

உங்களை வெளியேற்றியதில் இருந்து நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காததில் இருந்து இவர்கள் தான் ரவுடிக் கும்பலுக்கு எல்லா தகவல்களையும் அளித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகி விட்டது. இனிமேலும் அப்பாவிப் பதிவர்கள் இந்தச் சதிகாரக் கும்பலுடன் தொடர்ந்து இருக்கத்தான் போகிறார்களா அல்லது ரவுடிகளின் ப்ளாக் மெயில்களுக்கு உள்ளாகப் போகிறார்களா என்பதை அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும், உங்கள் பதிவுகளை பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து படித்து வருகிறார்கள், திரட்டியோ வறட்டியோ எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் பதிவுக்கு தொடர்ந்து வந்து படிக்கவே செய்வோம், நீங்கள் தொடருங்கள்.

ரவுடிகளுக்கு பதிவர்களின் தகவல்களை அளித்து நம்பிக்கைத் துரோகம் செய்த , சட்ட விரோத , சமூக விரோத, தேச விரோத, இன விரோத மணத் திரட்டியை வன்மையாகக் கண்டிக்கிறேன், மனசாட்சி உள்ள அனைத்து பதிவர்களும் அதில் இருந்து வெளி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதில் இன்னும் பதிவர்கள் தொடர்வார்களேயானால் அவர்களும் தேச விரோத , இன விரோத , சமூக விரோத ரவுடிகளுக்குத் துணை போகிறவர்களாவார்கள்

ச.திருமலை

ஜடாயு said...

// இணைய உலகம் மட்டுமல்ல உலகமும் தன்வாக்கிலேயே போய்க் கொண்டே இருக்கும். யாருடைய கருத்தையும், கனவுகளையும் யாரும் அணைபோட்டு தடுத்துவிட முடியாது.//

உண்மையான வார்த்தைகள்.

// தேவைப்பட்டால் நீங்களே ஐபியெல்லாம் கூட பார்த்து இது சரியா தவறா என்று தெரிந்து கொள்ளலாம். //

த.ம. ஆட்களுக்கு அவர்கள் பாணியிலேயே சவால் விட்டிருக்கிறீர்கள். Nice.

// இதுதான் தமிழர்களின் எதிர்காலம் என்று நினைக்கும்போது தான் கவலையாய் இருக்கிறது. சற்றும் முதிர்ச்சியற்ற - சவடால் பேசும் இளைஞர்கள், அவர்களைத் தட்டிக் கொடுக்கும் பெரியவர்கள் என்று எங்கே நமது சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது என்ற கவலை ஏற்படுகிறது. //

தமிழ் என்ற மொழியில் இணையத்தில் எழுதப் படும் விஷயங்களில் இத்தகைய முதிர்ச்சியற்ற, காலாவதியான வெறுப்பியல் சித்தாந்தங்களைத் தூக்கிப் பிடிக்கின்ற எழுத்துக்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை எண்ணும்போது, இதே கவலை தான் எனக்கும் உள்ளது நேசகுமார்.

// இவர்கள் இணைய ஊடகத்தில் தொடர்ந்து இந்திய இறையான்மைக்கு எதிராக ஓலமிட்டு வருகின்ற, அப்பட்டமான இந்திய வெறுப்பை முன்னிறுத்தி //

இவ்வளவு இந்திய பதிவர்கள், வாசகர்கள் இந்த திரட்டியைக் காண இந்தியாவில் எந்த கட்டுப் பாடும் கிடையாது. இந்திய தேசத்தின் கருத்துரிமை சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதை பலவீனப் படுத்தும் கருத்துக்களைப் பரப்புகிறார்கள்.

// ஆனால், இப்படிப்பட்ட விமர்சனங்கள் வேறு, அப்பட்டமான இன அழிப்பை - பிராம்மண எதிர்ப்பு என்ற பெயரில் செயல்படுத்துவது வேறு. //

வழிமொழிகிறேன்.

// உலகமே இந்த அடிப்படைவாதக் குழுக்களோடு பெரும் சமர் செய்துவருகின்றது. இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டு இந்தப் போரின் முக்கிய அங்கமாக விளங்கிவருகிறது, இந்நிலையில் முழுகும் கப்பலில் ஈழத்தவர்களையும், ஏனைய தமிழர்களையும் ஏற்றிவிட முயலும் இந்த முயற்சியைக் குறித்த எனது எதிர்ப்பைத் தெரிவிப்பதை ஒரு தமிழன் என்ற முறையில் எனது தார்மீகக் கடமையாக நினைக்கின்றேன்.//

மிக உறுதியான வரிகள் நேசகுமார். இத்தகைய தேச விரோதக் கும்பல்களை அடையாளம் காட்ட வேண்டியது தமிழ் இணையத்தில் பங்கு பெறும் ஒவ்வொரு தேசபக்த இந்தியத் தமிழனுக்கும் தார்மீகக் கடமையாகிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுக்கியமான இந்த விஷயத்தை வெளிக்கொணர்ந்ததற்கு மிக்க நன்றி.

Ariyaadhavan said...

நேசகுமார்,

விடுங்கள். சபையில் பெயர் வாங்க, குயில்கள் இசைப்பதில்லை. மன்னிப்போம். மறவோம். விக்கிரமாதித்தனைப் போல சற்றும் மனம் தளராமல் இன்னும் முனைப்புடன் இயங்குங்கள். நம் இளைய தலைமுறையினருக்கு நல்வழி காட்டும் பொறுப்பு உங்களைப் போன்ற விஷயம் தெரிந்தவர்களுக்கு உண்டு. நன்றி.

கரு.மூர்த்தி said...

நேசகுமார் , நான் உங்களை கண்டடைந்தது தமிழ்மணம் மூலமா என்ன ? ஒரு பூனை கதவடைத்தால் உலகம் என்ன இருளுமா ?

என்றும் உங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து படிக்கப்படும் , அடுத்த தலைமுறையும் உங்களை , உங்கள் எழுத்துக்களை நினைவு வைத்திருக்கும் ,

தொடந்த்து நிறைய எழுத வேண்டுகிறேன் , எங்கு எழுதினாலும் நேசமுடனில் ஒரு இணைப்பு தர வேண்டுகிறேன்

Anonymous said...

Dear sir,
We all are on your side.You please continue to write as you before.We will read your writings where ever it is.Thank You for a nice articles.

Anonymous said...

Hope to see u in Thenkoodu