.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

நேர்மைதவறாது பணி தொடர்வேன்.இது உறுதி.

அனைவருக்கும் வணக்கம்!

 நேசத்திற்குரிய அனைவருக்கும் ஒரு விடயம் அறியத்தரவேண்டிய கடமை எனக்குண்டு!
 
இப்போது நேரடியாக((நேரடிக்குரல்)(ஏற்கனவேஒலிப்பதிவு செய்யப்பட்டது ஒலிபரப்பாகலாம்) ) எந்த வானொலிகளிலும் எனது சேவையை வழங்கவில்லை!

 ஏற்கனவே கால நிலமையால் தனியார் மீடியா குரூப் நிறுவனத்தின் ஊடாக இயங்கிவந்த இணைவிலிருந்து விலகும் எங்கள் ஐபிசித்தமிழ் உடன் நானும் விலகுகிறேன்.
 
காலம் வரும்போது ஒலிக்கும்.
 
தயவுசெய்து ஐபிசித்தமிழ் பற்றிய தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். நம்ப வேண்டாம். அத்தோடு மக்களால் நேசிக்கப்படும் ஐபிசித்தமிழ் பெயர் கொண்டு , போலி முகம் காட்ட வேண்டாம். அது என்போன்று ஐபிசித்தமிழை நேசிக்கும் உண்மை உள்ளங்களைப்பாதிக்கும்.
 
உண்மையான துாய உள்ளம் நேசம் கொண்ட பலரது கடின உழைப்பு மற்றும் உயிரிழப்புக்களால் நேயர்களின் , மக்களின் ஆதரவால் உயர்ந்தது ஐபிசித்தமிழ். தமிழ் வளர்க்க வளரத்துடிப்பது.
 
ஐபிசித்தமிழ்  தமிழைக்கொச்சைப்படுத்த, தமிங்கில நிகழ்ச்சிகளுக்கு என்றும் துணைபோகாது.
 
அது எப்போதும் தடம் மாறதது.
அதை யாரும் மக்களை ஏமாற்ற பாவிக்காதீர்கள். அப்படிப்பாவித்தால் காலத்தாய் உங்களை நிச்சயம் தண்டிப்பாள்..
 
நல்லவர்கள் என்று நினைக்க வைத்து பழகி, அன்பு பாராட்டி, உறவுபோல் பழகிவிட்டு எல்லாவற்றுக்கும் ஆலோசனை கேட்பதுபோல் கேட்டு எங்களையும் காரணி ஆக்ககலாம் என உள்நோக்கம் கொண்டு பழகுமனங்களை எப்படி இனம் கான முடியும். பணம் படைத்தவர்கள் என நினைப்பவர்கள் -தனிப்பட்டவர்கள், மக்கள் மீது தங்கள் கருத்துக்களை எங்களைக் கருவியாக்கி கூலிக்கு மாறடிக்க வைக்கலாம் என நினைக்கும் போது என்றும் அதற்கு துணைபோக முடியாது.
 
நான் கடந்து வந்த புலம்பெயர் ஊடக   வாழ்க்கை பல நல்ல கெட்ட அனுபவங்களை மற்றும் சவால்கள், குழிபறிப்புக்கள், நம்பிக்கை துரோகம் ...என விடயங்களை உள்ளடக்கியது!
 
மற்றும்
 
எனது உண்மைப்பணி எனக்கு நல்ல நேயநெஞ்சங்களை காலம் அள்ளித்தந்தது.
என் இப்பயணத்தில் என்றும் என் அன்புள்ளங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன்.
 
ஏற்கனவே நொத்து போயிருக்கும் என் அன்பான  மக்களை குழப்பும் செயல்களில் சதிக்கூட்டுச்சேரும் துரோகக்கும்பல்களுக்கு என்னால்  துணைபோக முடியாது!
 
சத்தியம் செய்து விட்டு அடுத்த கனமே எங்களுக்கு முதுகில் குத்தும் துரோகத்தனம் வல்லமையால் மன்னிக்க முடியாதது.
 
அப்படிப்பட்டவர்களோடு பேச என் மனம் இடம் கொடுக்காது.  நான் மன்னித்தாலும் காலம் இவர்களை மன்னிக்காது தண்டிக்கும்.
 
தமிழ் மொழி - தமிழ்த் தேசப்பற்று நிறை மற்றும்  ஊடகப்பணியாளனாக என்றும்  உலக மற்றும் தமிழ்மக்களுடன் எனது மக்களுக்கான பணி தொடரும்.
 
தற்போதைய முக்கிய காலச்சுழச்சியில் ஏற்பட்டுள்ள நிலமைகள் இந்த நிலைக்கு என்னைத்தள்ளியுள்ளன.  காலம் எனக்கும் என் மக்களுக்கும் நல்ல பதிலைத்தரும். 

என் தாய்மண்மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அதேநேசத்துடன் பாதைமாறாது,இலட்சியம் நோக்கி நேர்மைதவறாது பணி தொடர்வேன்.இது உறுதி.


நேசமுடன்
சு.பா.ஈஸ்வரதாசன்.

கருத்துகள் இல்லை: