.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

கடந்தவை!

நடக்கின்ற போது...

கடந்தது..
கடக்கின்றது....
கடக்கப்போவது....

மலர்வுடன்..










இனிதே
அக, முகம் இருந்து விட்டால்
மகிழ்ந்திடும் வாழ்வே!

வையத்தின்
வாழவுதனில்
நம்மினத்தின் உயரம்தான் என்ன?
முகமில்லா உடலம்தான்
முண்டமென ஆகிவிடும்

மனதின்கண் பேசுமொழி,
பிறந்தமண் நுகரும்நாசி
செவிதனில் விழுந்திடாதா?
என் தேசமதின் சுதந்திர ராகம்.

விடியும், விடியும்
என்று
விளக்குகளை நாமேஅணைத்தால்…

சுடர் விடும் சூரியனே
இடர் துடைத்தே
எழுந்திட்டே வா!
ஆழமது வேர் விட்டு
இரும்புடைக்கும்
‘சுதந்திரம்’
மலர்வுடன்.

-(அருவி1- ஊற்று8 -2002 பிரதமஆசிரியர் என் பதிவு.)
=========================================
புலர்வுடன்..









விழித்துக் கொண்டால்
போதாது.
செழித்து விடவேண்டும்
வாழ்வு என்றால்,
சலியாத கடின செயற்பாடு முதல்,
நம்பிக்கை வைத்தே
நடைபோட வேண்டும்.
துன்பங்கள் கண்டு
துவண்டிட வேண்டாம்.
எத்தனை காலம்தான்
சொன்னோம் இதை
நம்மில் யார்தான்
விழிப்புற்றோம்?.

மொழி புரியா சோகங்களை
செவி கேட்டு அழுதது.?

சுதந்திரத்தில் கைவைத்தால்
சுவாசம் சுகமாகுமோ?

பேசுவது ஒன்றும் - பின்
பூசுவதும் ஒன்றுமாய்
மனிதரில் சில விசங்கள்..
இவை மாறிடாதா இங்கே?

நிமிடங்கள்,
நினைவுகள் தெளிவானால்
வெற்றி வாழ்வு
புலர்வுடன்.

(- அருவி1 –ஊற்று9-2002 பிரதமஆசிரியர்- என் பதிவு)
===============================================
நினைவுடன்…
நினைவுடன்…
என்றும் வாழ்வோம்
இது நிலைக்கவே,
மண்ணில் வாழ்வுக்கு
வாழவேண்டும்.

மூச்சு நிரப்பிவிட்ட
உயிர்ப்பை
பேச்சும் கற்றுபின்
ஏதேதோ ஆகி
காத்துப் போகும்காலம்
எது என்று
புரியாத உலகம்.

இதில்
மற்றவர் வாழ
வழிதந்தார் ஒரு சிலரே!
தாமும் வாழார்,
தள்ளியிருப்பவரும்
வாழ தள்ளி இரார்.

அழியும் தேகம்,
தெரியும்
ஆனாலும்
நாளும் கேடாய் வேசமிடும்.

பாரும் ஒரு சேதி!
பிறந்த பின் வாழ்வதும்
இறந்த பின் வாழ்வதும்
அவரவர்
சுயமான,
நினைவுடன்..
(மார்கழி 2002 – ஊற்று 10 – அருவி1 – பிரதம ஆசிரியர். என் பதிவு.)
=============================================================

உறுதியுடன்....

இணைகின்ற பயணம்..

… இமைக்கின்ற,
நடக்கின்ற, போதெல்லாம்
காலங்கள் நம்மைவிட்டு
கடக்கின்றது.

எவ்வளவு காலம்தான்
நாமே நம்மைப்பற்றி
குறை சொல்லிக்கொண்டே…

இதுவே
நமது வளர்ச்சிக்குதடையாக
இருக்குமல்லவா?

தனித்
தனியே ஒரு யாகம்
நமக்குள் நடக்கட்டும்.

தூய்மையான
உயிர்களின் நடமாட்டம்
நன்மையானதே! பூமி மகிழும்.

கவியரசரின் வரிகள் போல்
(போற்றுவோர் போற்றட்டும்…)
என்றும்
உறுதியுடன்.

(பங்குனி 2002 -அருவி1 -ஊற்று3- அருவி பத்திரிகையின் பிரதம ஆசியர். என் பதிவு
)
=======================================



நண்பர் அமலன் அவர்களுடன் இணைந்து
2002 ல் 'அருவி' இதழின் பிரதம ஆசிரியராக பணியாற்றிய காலம்.




















































































































































































































































































































































































































































































































































































































































































































































------------------------------------