.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

திங்கள், 11 மே, 2015

வாழ்த்தும் நெஞ்சம்!

வாழ்த்தும் நெஞ்சம்!
-------------------------------

ஐரோப்பிய வாழ்வில் என் அகதி வாழ்வுக்கு ஒத்தடம் தந்து ஆத்ம ஆறுதல் தந்தது என் வானொலி. பிரித்தானியா வந்ததும் என் முதற்த் தேடல் என் வானொலி.சுந்தர் தான் என் முதல் இலண்டன் கலைநட்பு . அவனிடம் விலாசம் வேண்டி வைத்திருந்தேன். கணேஸ் அண்ணையின் அறிமுகம் . தவம் அண்ணையின் இனிய நட்பு..(எல்லாம் எழுதிவைத்தது போல் அதுவாக நடந்தது) முதல் கலையகப் பயணம்.
என் கொழும்பு பள்ளிக்காலம் தந்த தமிழ் ஆசிரியர் இரவி வாத்தியுடன் சந்திப்பும். பின் சில தாமதங்களும் என் சின்ன வயது வேகம்... மாஸ்ரரை நேரச் சந்திப்பதற்கு மனம் உந்த...வேலை நேரத்தின் சின்ன ஓய்வு நேரத்தில் 20 பென்ஸ்போடும் தொலைபேசியில் வேலைத்தளத்திலிருந்தே அழைத்தேன். கதைத்தேன் அவருடன். பல கேள்விகள்.... பதில்கள்... நிறைவாக ‘சரி வாரும் ஒரு மணிக்கு, வந்து சந்தியும்‘ ...மனம் முழுக்க மகிழ்வு... பதட்டம்...பல ஏக்கம்....சந்திப்பு நிகழ்ந்தது. சந்தர்ப்பமும் கிடைத்தது. ..(சிறி அண்ணையின் சிறு பயிற்சியும் கிடைத்தது)மாஸ்ரர் அவர்களின் மனம் நிறை வாழ்த்தும் கிடைத்தது. ....இன்னும் என் வானொலியின் தேடலுடன் இன்றும் என் பயணம்......மனம் நிறைந்த மகிழ்ச்சி மாஸ்ரர். உங்கள் நாடகப் பயிற்சியில் இணையவில்லை என்றாலும் ஊடகப்பட்டறையில் இணைந்த மகிழ்வே மகிழ்வு!... உங்களை வாழ்த்த வயது போதாவிட்டாலும்... என் முகப்பக்கத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். - நேசமுடன்...
( நன்றி- கானா பிரபா)
அன்றிரவு நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர் நானும் கிட்டுவும் நீண்ட நேரம் அந்த இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் அந்தப் பாடலால் நிறையக் கவரப்பட்டிருந்தார் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அவர் எங்களுக்கு கட்டாயாமாக ஒரு வானொலி ஒன்று வேணும் என்று சொன்னார். மக்களிடம் கொண்டு செல்வதற்கு நல்லதொரு ஊடகம் வேணும் என்றார். அந்த நேரம் எங்களிடம் வசதிகள் இருக்கவில்லை. பிறகு கிட்டுவும் மறைந்து போனார். அதற்குப் பிறகு இந்த இணையம் வந்து வசதிகள் எல்லாம் ஏற்பட்ட பிற்பாடுதான் தொண்ணூற்றியேழில் குறைந்த செலவில ஒரு வானொலியை தொடக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். அப்பொழுது என்னுடைய சில நண்பர்களையும், ஞானரட்னசிங்கம் விக்கினராஜா ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு ஐ.பி.சி தமிழ் வானொலியைத் தொடக்கினோம். ஐரோப்பாவில் இலவசமாக அந்த வானொலி ஒலிபரப்பானது. அது இலங்கையையும் எட்டியது. இந்த வானொலி ஐரோப்பாவில் ஒரு தனித்துவத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றுதான் கூறுவேன். பி.பி.சியை பொறுத்தமட்டிடல் சங்கரண்ணா, அவர் எனக்குத் தந்த பயிற்சி ஒரு ஊடகத்தில் பேசுவதற்கான பயிற்சி அது மிகச் சிறந்தது. இனி தமிழ் என்று எனக்கு நல்ல கற்பித்தலைத் தந்தது என்றால் என்னுடைய பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியர் செல்வநாயகம் பேராசிரியர் சதாசிவம் இவர்கள் எல்லாம் வருகிறார்கள். கவித்துவத் தமிழ் எனக்குத் தந்ததென்றால் முதலில் மகாகவி, முருகையன், சில்லையூர் செல்வராஐன். அதன் பின்னர் நாடகத் தமிழோடு எனக்கு நல்லறிவைத் தந்த மதிப்புக்குரிய கண்ணியவான் குழந்தை சண்முகலிங்கம்;. இனி நான் இந்தியாவில் இருந்த காலத்தில் அதாவது அலுவலக வேலையாக பி.பி.சி நிறுவனத்திற்காக நான் அங்க போயிருந்தேன். அப்பொழுது ஐந்து ஆறு மாத காலத்தில் என்னோடு கூடி எனக்கு நிறைய உதவி புரிந்த மங்கை, ரி.ஆர்.எஸ்.வி இவர்களெல்லாம் எனது மொழியைத் துலக்கினார்கள். எனது பேச்சு வழக்கை துலக்கினார்கள் எனது சிந்தனையை துலக்கினார்கள். அதன் பின்னர் நான் சிறிது காலம் ரி.ரி.என் தொலைக்காட்சியில்கூட அதன் பணிப்பாளராக இருந்தேன். தயாரிப்புத்துறைப் பணிப்பாளராக. அதன் பின்னர் இப்பொழுது தமிழ்க் குடில் என்னும் இணைய வானொலி. ஐ.பி.சி யால் வெளியே வந்த பின்னர் தமிழ்க் குடிலைத் தொடக்கினேன்......

கருத்துகள் இல்லை: