.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

சனி, 16 மே, 2015கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?...ஓ...ஓ..ஓ..
அன்றங்கு அழிந்தது தேசம்..
அனைத்தையுமே பார்த்தது உலகம்!
கொன்றங்கே குவித்தனர் மோசம்..
கொடுமையிலும் கொடுமையம்மா!!!
அன்னை முன் பிள்ளைகளும்...
பிள்ளை முன் பெற்றவரும்..
துடிதுடித்து உயிர்துறந்தார்....
ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது....
கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?.
வெண்பனிக் காட்டிடை வந்தோம்
எம்பணி செய்திட மறந்தோம்?
கண்டதையும் கதைத்துக்கொண்டோம்
குழுக்குழுவாய் பிளவும் கண்டோம்
இன்றும் நிலை மாறவும் இல்லை
அங்கும் துயர் ஓயவுமில்லை.....
ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது....
கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?.
வென்றபகை வீரர் படை
கொண்டவர்கள் தமிழர் நாமே!
நேர்மைகொள் போர் வீரம்
தலைவன் வழி சென்றவர் தாமே!
துரோகம் சூழ்ச்சி சூழ்ந்ததனாலே..
யாவும் இங்கு அழிந்தது அம்மா!
தர்மம் இங்கு வெல்லுமென்றால்..
வெல்லும் வரை சென்று வெல்வோம்....


ஒரு சான்
வயித்துக்கு உணவாய்
போதுமானதை உண்பாய்(போம்)!
மீதமானதை
பண்பாய் பகிர வழிகாண்பாய்(போம்)!
ஒவ்வொரு வீட்டிலும் அன்பாய்
உலகின் மூலைமுடுக்கையும் நினைப்பாய்!
அம்மா .... பசி..
அதன் அர்த்தம் புரிவாய்...
அகிலம் ஒரு உயிரழுதால்
அகமதை உணர்வாய்!
வாய் ருசி உணவை
தா பசி தீரென்போர் நினை!
மனமே!
ஆண்மை இழுக்குகளே!
அழிந்துபோகக் கடவ!
-----------------------------------
அம்மாச்சி உன் நிழற்படம் 
பார்த்தபோது....
தொடர்ந்த செய்தியால்
மனம் வெந்தேன்....
என் தாயே!
உன்னை இழந்து நிற்கும்
உறவுகளுக்கு யார் ஆறுதல் சொல்வார்?
மீண்டும் மீண்டும் மீண்டும்
உன் முகப் படம்
பார்க்க முடியவில்லையம்மா!
மனதால் நீ
என் மகளென்றே துடிக்கிறேன்...
எழுதுவதற்கு விருப்பின்றியிருந்தேன்...
ஆனாலும்
மனமுந்தி எழுதுகிறேன்...
என் சொல்வேன்.
மனித வடிவில்
உலவும்...
பிறந்து தவறிய...
பிறப்பால் தவறிய...
தப்பான பிறப்பால்..
காட்டுமிராண்டி மிருகங்கள்... ஓநாய்கள் ?
மனம் நோகுதம்மா!
அண்ணன் ஆட்சியில்
இல்லா நிலை
அனைவருக்கும் புரியும்...
துாண்களும்...
முச்சந்திகளுக்கும்...
இப்போ
புரியும்...
அன்று சுடப்பட்டவைகளும்
மனித வடிவில்
உலவும்...
பிறந்து தவறிய...
பிறப்பால் தவறிய...
தப்பான பிறப்பால்..
காட்டு மிராண்டி மிருகங்களும் ஓநாய்களுமென்றே!
நான்
என்னறிவின் படி
உயிர்க் கொலை
ஏற்காதவன்....
இயற்கையாய்...
விபத்தால்...
விளைதல்
...
முளைத்த செடியே!
புன்னகைத்த புவே!
உடன்பிறவா சோதரியே!
என் மகளைப் போன்றவளே!
சாந்தியடையா ஆத்மமே!
....
......
.......
......
இந்த உலக மண்ணின்
ஆண்மை இழுக்குகளே!
அழிந்துபோகக் கடவ!
---
16.05.15 - ( வித்யா அம்மாச்சிக்கு)