.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

தமிழோடை!

தமிழ்தாசனின்
தமிழோடை.
=======================================
பிரசுரமானவை.
1.
இனித் தமிழிசை பாடவந்தேன்.
என் நாமம் தமிழ் வைத்தேன்.
இனி நான் எழுத்தில் தூங்கிடிலேன்.

பிறந்த மண்ணின் சுகம் மறந்திடேன்.
மறுபடியும்தேசம்
செல்ல வழி சொல்வேன் - வழி செல்வேன்.

காசுழைத்தும்
கடன் தீரா வாழ்வு கண்டேன் இங்கே!
மாசுபட்டு போயிடுமோ மனித வாழ்விங்கே!
தேசம் விட்ட வாழ்வும்,
தேகம் விட்டு உயிர் வாழும் அங்கே!
அதிலே நான் கண்டேன் இன்பம்.

பழங்கதை
கவிதை
சொன்னதை நான் சொல்லவில்லை
உலகறந்ததாம் நம்கதை.

ஊரில் அடிபட்டோம் ஏனோ உருப்பட்டோமா?
தேரிலா ஏறி தெருதாண்டி
ஊர்விட்டு உலகின் மேற்கு வந்தோம்.
நாயிலும் கேடாய்
பாயிலும் இல்லா படுக்கை.

நெஞ்சத்தை தொட்டுச் சொல் நிம்மதியாமோ?

காயும் நிலவும்,
பாயும் நதியும்,
வீசும் காற்றும்,
பேசும் தென்னம் கீற்றும்
பெண்ணும் கண்ணும்
இன்னும்
ஏதேதோ சொன்னேன்.
கவலை கட்டுண்டு உள்ளம் கிடந்தது.

மாறிவந்தோம்
மானம் வித்தோம்
மறுபடியும் வாழ்வு வர இங்காவது
உறவு கொள்வோம்.

சாதி விட்டாச்சு என்று பேச்சேயொழிய
முழுதாய் எரியலையே! – பெண்
சாதி அடிமை மொழிவிட்டாலும் அடிமதில் காயலையே?.
இவரைத்தேடிப்பிடி ஏறிமிதி
தாய்ப்பால் வெளிவரட்டும்.

சாதிவெறி பெண்ணடிமை சாம்பராகட்டும்.
(அருவி பத்திரிகை - என் பதிவு)
=======================================

ஓடை - 2

உருகுவதோ உள்ளம்!

'விழி அருகில் உதடுகள் வைத்தேன்
மொழிகள் மறந்துபோய் மௌனமானேன்.

ஏன்?என்னில் இத்தனை குழப்பங்கள்.

தேன் இதழின் முத்தங்கள் பரிமாறும்
உன் பார்வைகளில் நான் பாதியானேன்.'

'ம்ம்... இதற்கென்னமோ குறைச்சலில்லை..'

முறைத்துப் பார்த்தவளை இறுக்கிக்கொண்டான்.
அவளின் மனதில் எத்தனை ஆனந்தம்.
அவள் மட்டும் குறைந்தவளா என்ன?
பதிலுக்கு பதில் அதில்தானே பரவசம்

முத்தத்தில் ஒரு மகாயுத்தம்.

' போதும் பொன்மயிலே!
 உந்தன் மடிசாய ஆசை'

வருணன் சொன்னதும்
நிலாமுகம் ஒளிவீசி புன்னகை பூத்தது.

'சாய்ந்து கொள்ள நீ இருந்தால் சத்தியமாய் உலகம் மறப்பேன்'
வருணன்.

'............'

'விந்தியா ஏன் மௌனம்?
இதற்கு பதில் இல்லையா?
இல்லாவிட்டால்
பெண்களே பேசும் மொழி
என்பதால் மௌனமா?'

'என்னது பெண்களெல்லாம்...?
அனுபவமோ?
அதுதானே பார்த்தேன்
பொய்யிலோ புலமை பெற்றவரோ?'

'என்னவளே! மேகங்கள் உரசுவதால்
தான்மின்னல் வருகிறது.
உந்தன் விழிகளில் படும்
என் பார்வைகள்
ஏனோ தோற்றுப்போகின்றன.?'

'மழுப்புவதில் மன்னர் போலும்'

கட்டிக்கொண்டான்.கன்னத்தில் முத்தமிட்டான்

'அடியே!
நீ இன்றி ஒரு
அணுவும் அசையாது
காதலில்..... நனைந்தேன்.
'இது என்னுள் ஏதோ சொல்லிற்று....'

பதிலுக்கு அவளும் இறுக்கிக் கொண்டாள்.
இன்னும் இறுகிக் கொண்டாள்.

' இறவாத அன்பு வேண்டும்
மீண்டும் பிறப்புண்டேல்
உனை என்றும் மறவாது வேண்டும்'

மனதுக்குள் பாடிக்கொண்டான்.
உலகம் மறந்து போனது.
காதலின் கட்டில் பாடம் ஆரம்பமாகிறது....

('அருவி' வைகாசி 2002 )
-----------------------------------------------------------------


ஓடை - 3


கண்களுக்கு!முத்தமிட்டன
முதல் சந்திப்பாய்
கடதாசியும் பேனாவும்.

'எத்தனை காலமும்
எண்ணம் சொல்வது
கண்களே காதல் என்று.

முட்டியும்
மோதியும்
விழிகள்
வெட்டியும் - உதிரம்
ஓடா உணர்வான மோதல்.

கட்டியும் போடாது
கெட்டியாய் பிடித்திடும்'

- கவிதை எழுதுகிறோம்

என்ற நினைப்பில்
எழுதிய கடதாசிகளை
கசக்கி  எறிந்தான் மாறன்.

மீண்டும்....

'கசக்கி எறியப்பட்ட கடதாசிகள்'

கண்களின் பார்வைகள்
கசக்கி எறிந்தன.

கண்களில் மயங்கியவர் யாவருமோ?
மரணமில்லாத மயக்கம்.

கண்கள்

உண்மைதான்
கண் - அது -'கள்'
கண் அசைவினில்
கவிதை சொல்வதும்
காதலைத் தூதெய்வதும்
கை வந்த கலையாமோ?
பெண்களுக்கு.....

பெண்கள்

உண்மைதான்
பெண்'கள்'-
எழுதிய கடதாசிகளை
கசக்கி எறிந்தான் மாறன்.

கவிதைப் புலம்பலை தந்தன
கண்கள் என்றால்?
காதல் கொண்டது நெஞ்சம்.

கசக்கி எறியப்பட்டிருக்கும்இன்னும் கடதாசிகள்.....

('அருவி' ஆடி -ஆவணி 2002).
-----------------------------------------------------------------

-----------------------------------------------------------------