.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

வியாழன், 23 ஜூன், 2011

விழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்!?

இன வெறி ஆக்கிரமிப்பினால் அழியும் எம்மினம்...!
விழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்!?
 
 
இன வெறி ஆக்கிரமிப்பினால் அழியும் எம்மினம்...! நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஓர் கால இடைவெளியில் நகர்கின்றது. இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது. போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பபாரத்தை சுமக்க வேண்டிய நிலை உணர்வு ரீதியில் பாதாளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திபாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறக்கிவிட்ட காலத்தின் கொடுமையான மாற்றம்.


.........எம்சமுகத்தின்    ஆன்மாவை  உயிருட்ட ................

........எய்ட்ஸ் நோயிலிருந்து எம் மக்களை மீட்க..............

தமிழினம் போரில் நலிவுற்று வறுமை அங்கவீனம் இவை தாண்டி இனவாத அரசின் கலாசார யுத்தத்தில் கண்ணுக்கு தெரியாமலே அழிவை நெருங்கு கின்றது தென்னாபிரிக்கா சுதந்திரம் பெற்றபோது அம்மக்களில் அனேகர் எய்ட்ஸ் நோயாளிளாக போதைப்பிரியர்களாகவும் காணப்பட்ட துன்பியல் எங்கள் மண்ணிலும்..... இறுக்கமாக கலாசாரத்தை கொண்ட ஈராக் ஆப்கானிஸ்தான் மக்கள்போரில் கணவனை இழந்தும் வறுமையினாலும் பாலியல் பண்டத்தை விற்கும் பரிதாபகதியில் உள்ளனர். அவ்வாறு நமது மண்ணும் மக்களும்... தற்போதைய நிலையும் ...பலவீனமான தன்மையை கொண்டிருப்பதால் எய்ட்ஸ் உக்கிரமாக பாதிக்கும் நிலை காணப்படுகிறது. தற்போதைய அரசின் அதிபரின் சிந்தனை, விபச்சாரத்தையும் சூதாட்டத்தையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நாளாந்தம் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக்கப்படுகின்ற நிலை. அம் மண்ணிலோ விதவை பெண்களை விபச்சாரத்தில் வீழ்த்த இராணுவப்புலனாய்வு பலவழியிலும் நகர்கிறது.


எய்ட்ஸ் நோய் வழமைக்கு மாறான ஒரு விதத்திலேயே பரவுகின்றது. இளவயதினர் அதாவது 17-25 வயது மட்டம் எதேச்சையாகவே இனம் காணப்பட்டுள்ளது. பெண்களை எய்ட்ஸ் நோயாளி ஆக்குவது மொத்த சமுகத்தையும் பாதிக்கும். ஆடைத்தொழிற்சாலை மறுபுறம் விபச்சாரம் என்றே தமிழினத்தை அழிக்க அலைகிறது அரசு.


திட்டமிட்டே எய்ட்ஸ் நோய் பரப்பப்படுகின்றது. அதேவேளை எய்ட்ஸ் விழிப்புணர்வும் சில நிறுவனங்களின் தடையால் அனுமதி வழங்காது தவிர்த்துள்ளதால் நடைபெறாதே உள்ளது.
 
ஒரு சிலர் பாதிப்படைய ஆரம்பித்து விட்டதான உறுதித் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

என்ன செய்யப்போகிறோம்?


பதில் தாருங்கள் எம்மினமே!




‘உயிராலயம்‘

நேசமுடன் ....

சு.பா.ஈஸ்வரதாசன்.

கருத்துகள் இல்லை: