.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

வியாழன், 23 ஜூன், 2011

விழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்!?

இன வெறி ஆக்கிரமிப்பினால் அழியும் எம்மினம்...!
விழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்!?
 
 
இன வெறி ஆக்கிரமிப்பினால் அழியும் எம்மினம்...! நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஓர் கால இடைவெளியில் நகர்கின்றது. இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது. போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பபாரத்தை சுமக்க வேண்டிய நிலை உணர்வு ரீதியில் பாதாளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திபாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறக்கிவிட்ட காலத்தின் கொடுமையான மாற்றம்.


.........எம்சமுகத்தின்    ஆன்மாவை  உயிருட்ட ................

........எய்ட்ஸ் நோயிலிருந்து எம் மக்களை மீட்க..............

தமிழினம் போரில் நலிவுற்று வறுமை அங்கவீனம் இவை தாண்டி இனவாத அரசின் கலாசார யுத்தத்தில் கண்ணுக்கு தெரியாமலே அழிவை நெருங்கு கின்றது தென்னாபிரிக்கா சுதந்திரம் பெற்றபோது அம்மக்களில் அனேகர் எய்ட்ஸ் நோயாளிளாக போதைப்பிரியர்களாகவும் காணப்பட்ட துன்பியல் எங்கள் மண்ணிலும்..... இறுக்கமாக கலாசாரத்தை கொண்ட ஈராக் ஆப்கானிஸ்தான் மக்கள்போரில் கணவனை இழந்தும் வறுமையினாலும் பாலியல் பண்டத்தை விற்கும் பரிதாபகதியில் உள்ளனர். அவ்வாறு நமது மண்ணும் மக்களும்... தற்போதைய நிலையும் ...பலவீனமான தன்மையை கொண்டிருப்பதால் எய்ட்ஸ் உக்கிரமாக பாதிக்கும் நிலை காணப்படுகிறது. தற்போதைய அரசின் அதிபரின் சிந்தனை, விபச்சாரத்தையும் சூதாட்டத்தையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நாளாந்தம் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக்கப்படுகின்ற நிலை. அம் மண்ணிலோ விதவை பெண்களை விபச்சாரத்தில் வீழ்த்த இராணுவப்புலனாய்வு பலவழியிலும் நகர்கிறது.


எய்ட்ஸ் நோய் வழமைக்கு மாறான ஒரு விதத்திலேயே பரவுகின்றது. இளவயதினர் அதாவது 17-25 வயது மட்டம் எதேச்சையாகவே இனம் காணப்பட்டுள்ளது. பெண்களை எய்ட்ஸ் நோயாளி ஆக்குவது மொத்த சமுகத்தையும் பாதிக்கும். ஆடைத்தொழிற்சாலை மறுபுறம் விபச்சாரம் என்றே தமிழினத்தை அழிக்க அலைகிறது அரசு.


திட்டமிட்டே எய்ட்ஸ் நோய் பரப்பப்படுகின்றது. அதேவேளை எய்ட்ஸ் விழிப்புணர்வும் சில நிறுவனங்களின் தடையால் அனுமதி வழங்காது தவிர்த்துள்ளதால் நடைபெறாதே உள்ளது.
 
ஒரு சிலர் பாதிப்படைய ஆரம்பித்து விட்டதான உறுதித் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

என்ன செய்யப்போகிறோம்?


பதில் தாருங்கள் எம்மினமே!




‘உயிராலயம்‘

நேசமுடன் ....

சு.பா.ஈஸ்வரதாசன்.

புதன், 15 ஜூன், 2011

எமது மண், மக்கள் பட்ட அவலம்

எமது மண், மக்கள் பட்ட அவலம்....

வெளிப்படுத்திய பிரித்தானிய தொலைக்காட்சி!
11.05 இரவு செவ்வாய் 14 ஜீன் 2011  அன்று

 Channel 4

Jon Snow presents a forensic investigation into the final weeks of the quarter-century-long civil war between the government of Sri Lanka and the secessionist rebels, the Tamil Tigers frreedom fighter. More Series 1 Episode 1 Sri Lanka's Killing Fields
With disturbing and distressing descriptions and film of executions, atrocities and the shelling of civilians
To explore the issues further go to the website at www.channel4.com/srilanka

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170


எந்தன் மண்ணே!

எந்தன் மண்ணே! தாய் மண்ணே!
 உன்னை எண்ணி பாடுகின்றேன்.
 எந்தன் மண்ணே! தாய் மண்ணே!
உன்னை எண்ணி வாடுகின்றேன்.

  ஒருதாயின் பிள்ளைபோலே
மடிமீது வாழ்ந்த காலம்
உருவாகும் நேரம் வா தாய்மண்ணே!

உள்ளத்தில் சோகம் சோகம்
இங்கே நான் பாடும் ராகம்
இன்றேதான் மாறும் காலம்.

  காலங்கள் மாறும் மாறும்.
சோகங்கள் தீரும் தீரும் தாய்மண்ணே!
உருவாகும் எங்கள் ஈழம்.
நமதாகும் உரிமை கீதம். தாய்மண்ணே!
காலங்கள்தான் போனாலும் நேரங்கள்தான் கூடிவரும்
சோகங்கள்தான் தொடர்ந்தாலும் யாகங்கள்தான் தீர்த்துவிடும்.

காயங்கள் ஆறும் ஆறும்.
தாகங்கள் தீரும் தீரும் தாய்மண்ணே!
நிலையாகும் எங்கள் ஈழம்
உலகாழும் உரிமை கீதம் தாய்மண்ணே!
காலங்கள்தான் ஆனாலும் காயங்கள்தான் ஆறிவிடும்.
சோகங்கள்தான் படர்ந்தாலும் யாகங்கள்தான் தீர்த்துவிடும்.

 

ஞாயிறு, 12 ஜூன், 2011

ஒற்றுமையுடன் எழுவோம்!

A forensic investigation into the final weeks of the civil war between the government of Sri Lanka and the Tamil Tigers. Features devastating and horrific new video evidence of war crimes. COMING SOON Sri Lanka's Killing Fields - Channel 4 - Tue, 11.05pm http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields
செவ்வாய்க்கிழமை 14.06.2011 அன்று CHANNEL 4 பிரித்தானிய தொலைக்காட்சி வழியாக தமிழீழத் தாயகத்தின் மீது இலங்கை மற்றும் பிராந்திய அதனுடன் கூடிய உலக வல்லரசுகளின் கூட்டுச்சதியுடன் கூடிய இன அழிப்பின் அம்பலம் சில ஆதாரங்களுடன் முழுமையான காணொளி ஒளிபரப்ப படுகிறது. CHANNEL 4 இன் இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்களைப்பகிருங்கள். http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields
அன்னைத் தமிழ் பூமி அழிவுபூமி ஆனதுவோ?
இன்பத் தமிழ் பூமி இடிந்தழிந்து போவதுவோ?
தமிழ்த்தோழா தமிழ்த்தோழா!
விழித்துவிடு விழித்துவிடு!
தரணியெங்கும் தரணியெங்கும்
செழித்துவிடு செழித்துவிடு!

அள்ளிக்குடிக்க நீருமின்றி
உப்பு நீரைபருகுவதோ?
உமிபிடைத்து அரிசிஅள்ளி
உணவுக்கஞ்சி காச்சுவதோ?

பணம்படைத்தோர் புலம்பெயர்ந்தோம்
பாவிமக்கள் படுகின்றார்
உலகவிதி மாற்றிடவே! உலகத் தமிழா ஒன்றுபடு
விலக இனி நேரமில்லை விரைந்து நீயும் ஒன்றுபடு
  உள்ளம் இங்கு துடிக்குதம்மா ஊரை எண்ணி கலங்குதம்மா!

பிஞ்சு முதல் ஆச்சி வரை குடு குடு அப்புவுடன் அன்புத்தங்கை தம்பியரும் சிதைவடைந்து போவதுவோ?   

சனி, 11 ஜூன், 2011

வலியின் வரிகள்.

பல்லவி சரணம்1 சரணம் 2 நிறைவு இசை மற்றும் உணர்வுக்குரல் - திரு.குட்டி (நெதர்லாண்ட்) ஒருங்கிணைப்பு -சு.பா.லோகதாசன் (எனது சின்னண்ணா)

வியாழன், 2 ஜூன், 2011

வணக்கம்!

வாருங்கள்  வரவேற்கிறேன்.

நீங்கள் விரும்புகின்றபோது...
உங்கள் நேரப்பகிர்வுக்கு வணக்கம்.


எனது வாழ்க்கைப் பயணத்தில்
என் ஞாபகங்கள்...
என்னால் பதியப்பட்டவை...
என்னிடம் அன்புள்ளங்கள்  மற்றும் ஏனையோர்  பகிர்ந்தவை...
இன்னும்....

நடந்தவை...
கடந்தவை...

என் சிந்தை வந்தவை...
என்னால் பகிரக்கூடியவை...
அறிந்தவை...
அறியத்துடிப்பவை...

ஒரு உயிரினமாக...
ஒரு அப்பாவி மனிதனாக...
ஒரு மகனாக...
ஒரு உடன்பிறந்தவனாக...
ஒரு நன்பனாக..
ஒரு கணவனாக...
ஒரு அப்பாவாக...
ஒரு உறவினனாக...
ஒரு அறிமுகமில்லாதவனாக...
ஒரு ரசிகனாக...
ஒரு...
ஒரு......



இன்னும் புரிந்ததுபோல் புரியாதவை...

பணிவுடன் பகிர்கிறேன்.


சில என் வாழ்வில் சந்தித்தவை ...
உண்மைப்பகிர்வுகள்...உண்மை மாறாது...
சிலபெயர்கள் வேறு பெயர்களாக...
மற்றும்,
என் எண்ணங்கள், எழுத்தாகியதால்...
உங்களுடன் பகிர்கிறேன்.

வாசித்து செல்லுங்கள்...

கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் 
குறைவிளங்காது
தயவுடன்
அன்புள்ளத்துடன்  சுட்டிக்காட்டுங்கள்.
உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.


நேசமுடன்...
சு.பா.ஈஸ்வரதாசன்.

புதன், 1 ஜூன், 2011

உயிர்க்குள் முளைத்தவை..

Wednesday, 18 June 2008

உயிர்குள் முளைத்தவை...

என்னைத் துளைத்து எனக்குள் விதைத்து உயிர்குள் முளைத்தவை...
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள்பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ??? -பாரதியார்
பொது நலத்துக்கு உழைக்கும் அறிஞர்களை தன்னலத்துக்கு உழைப்பவர்கள் விரைவில் வென்று விடுவார்கள். முன்னது - ஆற்றின் ஊற்று நீர் போன்றது. பின்னது - காட்டாற்றில் பெருகி வரும் வெள்ளம் போன்றது.
- -கி.ஆ.பெ.விசுவநாதம்.
----
குறள்
49.காலம் அறிதல்
'ஞாலங் கருதினுங் கைகூடும் - காலம்
கருதி இடத்தாற் செயின் -484.
'காலங் கருதி இருப்பர் - கலங்காது
ஞாலங் கருது பவர்' -485
74. நாடு
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் - ஏமம்
அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து' -738
ஈசன் மொழிகள்

'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'

'எழுத்துயர படைப்பு உயரும்

படைப்புயர சமூகம் உயரும்'

-------
ஒருமுறை..
ஒன்று சொல்வேன்.
ஒரு முறை மலரும் மலர் போல்
மொட்டவிழும் ஒருமுறை பெண்மை.
தொட்டவிழும் ஒருமுறை தாய்மை.
கண்கள் பேசியோ? பேசாமலோ?
காதல் ஒரு முறை
.24.12.02
--------
'எல்லாத் தரப்பினரும்
நல்ல வாசிப்பாளர்களாக இருந்தால் உலகே உயர்ந்துவிடும்.'
---------
'பிறப்பின் மகிமை புனிதமானது
என்பதை நிரூபித்திட்ட நன்நாளை நினைத்து
நாமெல்லாம் மகிழ்ந்திருப்போம்.'
-------
அமைதியை நாடும் மனம்
ஆறுதல் தேடும் இடம்
ஏதோ மனிதச் சத்தங்கள் பொறுக்கும்.
23.09.00
---
தவறியவை தவறியவையே!
தடுமாற்றம் என்பது இருந்துவிட்டால்
தவறுதலுக்கு தப்ப முடிவதில்லை.
தப்புதல் என்பது?
தப்பாகாது எனச் சொல்வதற்கு இல்லை.
13.09.00
-----
காதல் மொழி.
சின்ன சின்ன பார்வைகள் போதும்
சிரித்த கண்கள் பூசுதல் போதும்
எந்தன் மனதை திருடிக்கொண்டதுமில்லாமல்
இல்லை என்று பொய்யும் சொல்வது
பெண்மையின் உண்மையோ?
000000000