.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

தேடல்.

தேடல்.
தேடல் என்பதுடன் - மனம்
கூடல் கொண்டதால்
நாடல் கண்ட
நடைமுறைகளின் வெளிப்பாடும்,

நாளைக்காலமும்
நறுக்கென  நினைவுகளில் வீழும்
சுருக்குகள் முடிச்சவிழ்வதில்
முன்நிற்கும் - கருக்கட்டியவை
மொத்தமும்
கைதவழந்திட
கைவருவதில்
கைதொட்டு
கையணைத்து
மனம் மகிழ்ந்திட மகிழ்வு.

தேடல்.......
வீட்டின்....
எங்கேயோ ஒரு முலையில்
கூட்டில் குடிகொள்ளும்
உணர்வின் ஓசைகளும்
உலகின் எல்லையிலும்
எல்லைவிட்டு
எங்கும் போகும்
கற்பனையில்
கடுகளவும்
எங்கும் ஏங்கும்
மனித நேயத்தின் மன அதிர்வுகளும்
எல்லாவற்றையும் தாண்டி
அடி ஆழத்தில்
தூரத்தே தெரியும்  கிட்டத்து நிகழ்வுகளே!

'பிறந்து விட்டால் படைத்துவிடுஇறந்து விட்டாலும் பிறந்துவிடு'

( ரமேஸ் வவுனியன் அவர்களின் 'தேடல்' கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்ட நேசமடல். 2000 ஆண்டு)