.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

'தேசத்தின்குரல்' நினைவு சுமந்து.

1.
வாராய்! வாராய்!
வாசல் தேடிபாலா அண்ணலே!
உள்ளம் உருகி நோகுதே!
உயிரும் வருந்தி பாடுதே!
பாடும் பாடல் கேட்குதா? (வாராய்!)

ஈழம் என்னும் மூச்சிலும்
அறிவு கொண்ட பேச்சிலும்
அன்பில் என்றும் வாழ்ந்திடும் உள்ளம் நீரே பாலா!
உலக அரங்க காற்றிலும்
ஈழத் தமிழர் வீட்டிலும்
உந்தன் குரலே கேட்டதே! மறக்குமோ பாலா?
பல அர்த்தம் தந்த சின்னமே!
உறவான பால சிங்கமே!
மீண்டும் எழுந்து வாராயோ? (வாராய்!)

ஆழம் கொண்ட ஞானியாய்!
அண்ணன் அருகில் தோழனாய்!
உறவில் என்றும் நிலைத்திடும் எண்ணம் நீரே பாலா!
வீரம் பிறக்கும் நாட்டிலும்
ஈழத் தமிழின் ஏட்டிலும்
நித்தம் முகமே பூக்குதே!உறக்கமோ பாலா?
உலவி வந்த சந்தமே!
உறுமி வென்ற தமிழ்ச் சிங்மே!
மீண்டும் பிறந்து வாராயோ?(வாராய்!)

17.12.06

2.
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!! எங்கள் பாலா அண்ணா!
அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)

தணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்துதேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்தஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!
உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!! (பாலா அண்ணா)

16.12.06
தமிழீழ விடுதலைப் பாதையில்,
தமிழின வரலாற்றின் அரசியல்,
வெற்றிப் பயணத்தின் மதிநுட்ப வழிகாட்டி!

தமிழின விடியலின் மதி ஒளிகாட்டி!
உலகத்தமிழினத்தின் உயிராழத்தில்
மாறாத முகமுமாய்,
மங்காத குரலொலியுமாய்
வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள் மதி அகம்காட்டி!

14-12.06.

3.
ஏற்குமோ?
தமிழின உளமது ஏற்குமோ?
மதிமுகமே! மறந்து போகுமோ?
தேசமே தாங்குமோ?
அறிவாலமரமே! பாலாண்ணையே!
மனமெங்கும் குரலொலியே! தமிழ் மனதார மொழியிலையே! - அந்த மதிப் பயண வழியில்லையே! ( ஏற்குமோ)

தலைவனின் அருகினில்
அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின்
மதிநுட்ப வழிகாட்டி!
பேச்சுக் களங்களின் தடை நீக்கி - விடுதலை
வீச்சுக் களங்களில் உணர்வூக்கி
எதிரிக்கு அரசியல் எரிமலையே!
ஓய்ந்துபோனதோ அறிவலையே! (ஏற்குமோ)

மலையென மதியினில்
விடுதலைச் சுடரேற்றி!
உடையினில் பேச்சு
நடையினில் எளிதேற்றி!
உலகத் தமிழின உள்ளத்து உறவாகி - வேதனை
தந்திங்கே போனதெங்கே!
எத்திக்கும் மௌனமாய் ஆனதிங்கே!சாய்ந்துபோனதோ? அறிவுச்சரித்திரமே! (ஏற்குமோ)
14.12.06
.


4.
ஞானக்குயிலே!தேசக்குரலே!!
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!!
எங்கள் பாலா அண்ணா!

அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)த
ணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த
அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்து
தேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்த
ஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!!(பாலா அண்ணா).16.12.06



5.
மாமணியே!
மனித மாணிக்கமே!
தேசத்தின் குரலே!
சர்வதேசத்தில் தமிழர்க்காய் முழங்கிய சங்கே!
உள்ளமெல்லாம் உச்சரிக்கும் அண்ணா பாலா! - நீரே
உயர்வானமிங்கு வந்துதிக்கும் அறிவு நிலா!
உமது பேச்சென்றும் இனிக்கும் பலா!
பாலா அண்ணன் எனும் நாமம்
காலம் போனாலும் போனாலும் மறையாதது.

சகாப்தம் படைத்த சானக்கியரே!
சகா வரம் பெற்ற அறிவொளியே!
வீசும் காற்றுப் போல்! ஒளிக் கீற்றுப் போல்!
என்றும் நிலைத்த நித்தியமே!

மாபெரும் மனித மாணிக்கமே! - தமிழ்
மண்ணில் உதித்த மாமணியே!
மங்காப் புகழ் பூத்த அறிவுச் சுடர்விளக்கே!
தமிழின வானில் அம்புலி!
தரணியில் தத்துவ அரசியல் அறிவுப்புலி!
தலைவன் அருகில் அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின் மதி நுட்ப வழிகாட்டி!
அரசியல் தத்துவமே!
அறிவியல் புத்தகமே!
அன்பெனும் பெட்டகமே!
ஈழமணி நாட்டினிலே தீராத தாகம் கொண்டீர்!
வீரத் தமிழ் தலைவன் அருகில் மாறாது நின்றீர்!
அரசியல் ஞானியே! அறிவு ஏணியே!
தமழர் நம் நெஞ்சிலே நினைவாகி நிலைத்தீரே!


6.
மதிபாலா மறையவில்லை - மனங்களிலே!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

கதிகாலம் அழைத்ததென்பீரோ?
விதியாலம் செய்ததென்பீரோ? மதிஞானியே!
எழுத்து வரிக் காதலனே! - எழுத்துலகில்
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

பேச்சினிலும் பேனா வீச்சினிலும் - உமது
மூச்சினிலும்தத்துவமே! தமிழீழமே!
கண்ணாடி அணிந்தே - நம்முன்னாடி நிற்கின்றீர்
குறுந்தாடி முகவழகே!மலர்ந்தீரே!
மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

வரிப்புலிதான் வீழ்வதில்லை
வரலாறாய் எழுகின்றார்.
தேசத்தின் குரலே! தேசப் புகழே! - நம்
உயிரெல்லாம் முளைக்கின்றீர்!
பிறப்பாகி பிறப்பாகி
புதுப் பிறப்பாகி உயிர்கின்றீர்!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)


'தேசத்தின்குரல்' நினைவு சுமந்து.
சு.பா.ஈஸ்வரதாசன் .