.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

சனி, 16 மே, 2015



கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?...ஓ...ஓ..ஓ..
அன்றங்கு அழிந்தது தேசம்..
அனைத்தையுமே பார்த்தது உலகம்!
கொன்றங்கே குவித்தனர் மோசம்..
கொடுமையிலும் கொடுமையம்மா!!!
அன்னை முன் பிள்ளைகளும்...
பிள்ளை முன் பெற்றவரும்..
துடிதுடித்து உயிர்துறந்தார்....
ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது....
கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?.
வெண்பனிக் காட்டிடை வந்தோம்
எம்பணி செய்திட மறந்தோம்?
கண்டதையும் கதைத்துக்கொண்டோம்
குழுக்குழுவாய் பிளவும் கண்டோம்
இன்றும் நிலை மாறவும் இல்லை
அங்கும் துயர் ஓயவுமில்லை.....
ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது....
கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?.
வென்றபகை வீரர் படை
கொண்டவர்கள் தமிழர் நாமே!
நேர்மைகொள் போர் வீரம்
தலைவன் வழி சென்றவர் தாமே!
துரோகம் சூழ்ச்சி சூழ்ந்ததனாலே..
யாவும் இங்கு அழிந்தது அம்மா!
தர்மம் இங்கு வெல்லுமென்றால்..
வெல்லும் வரை சென்று வெல்வோம்....


ஒரு சான்
வயித்துக்கு உணவாய்
போதுமானதை உண்பாய்(போம்)!
மீதமானதை
பண்பாய் பகிர வழிகாண்பாய்(போம்)!
ஒவ்வொரு வீட்டிலும் அன்பாய்
உலகின் மூலைமுடுக்கையும் நினைப்பாய்!
அம்மா .... பசி..
அதன் அர்த்தம் புரிவாய்...
அகிலம் ஒரு உயிரழுதால்
அகமதை உணர்வாய்!
வாய் ருசி உணவை
தா பசி தீரென்போர் நினை!
மனமே!
ஆண்மை இழுக்குகளே!
அழிந்துபோகக் கடவ!
-----------------------------------
அம்மாச்சி உன் நிழற்படம் 
பார்த்தபோது....
தொடர்ந்த செய்தியால்
மனம் வெந்தேன்....
என் தாயே!
உன்னை இழந்து நிற்கும்
உறவுகளுக்கு யார் ஆறுதல் சொல்வார்?
மீண்டும் மீண்டும் மீண்டும்
உன் முகப் படம்
பார்க்க முடியவில்லையம்மா!
மனதால் நீ
என் மகளென்றே துடிக்கிறேன்...
எழுதுவதற்கு விருப்பின்றியிருந்தேன்...
ஆனாலும்
மனமுந்தி எழுதுகிறேன்...
என் சொல்வேன்.
மனித வடிவில்
உலவும்...
பிறந்து தவறிய...
பிறப்பால் தவறிய...
தப்பான பிறப்பால்..
காட்டுமிராண்டி மிருகங்கள்... ஓநாய்கள் ?
மனம் நோகுதம்மா!
அண்ணன் ஆட்சியில்
இல்லா நிலை
அனைவருக்கும் புரியும்...
துாண்களும்...
முச்சந்திகளுக்கும்...
இப்போ
புரியும்...
அன்று சுடப்பட்டவைகளும்
மனித வடிவில்
உலவும்...
பிறந்து தவறிய...
பிறப்பால் தவறிய...
தப்பான பிறப்பால்..
காட்டு மிராண்டி மிருகங்களும் ஓநாய்களுமென்றே!
நான்
என்னறிவின் படி
உயிர்க் கொலை
ஏற்காதவன்....
இயற்கையாய்...
விபத்தால்...
விளைதல்
...
முளைத்த செடியே!
புன்னகைத்த புவே!
உடன்பிறவா சோதரியே!
என் மகளைப் போன்றவளே!
சாந்தியடையா ஆத்மமே!
....
......
.......
......
இந்த உலக மண்ணின்
ஆண்மை இழுக்குகளே!
அழிந்துபோகக் கடவ!
---
16.05.15 - ( வித்யா அம்மாச்சிக்கு)

திங்கள், 11 மே, 2015

என் வல்லமை!

                                                                      என் வல்லமை!

வாழ்த்தும் நெஞ்சம்!

வாழ்த்தும் நெஞ்சம்!
-------------------------------

ஐரோப்பிய வாழ்வில் என் அகதி வாழ்வுக்கு ஒத்தடம் தந்து ஆத்ம ஆறுதல் தந்தது என் வானொலி. பிரித்தானியா வந்ததும் என் முதற்த் தேடல் என் வானொலி.சுந்தர் தான் என் முதல் இலண்டன் கலைநட்பு . அவனிடம் விலாசம் வேண்டி வைத்திருந்தேன். கணேஸ் அண்ணையின் அறிமுகம் . தவம் அண்ணையின் இனிய நட்பு..(எல்லாம் எழுதிவைத்தது போல் அதுவாக நடந்தது) முதல் கலையகப் பயணம்.
என் கொழும்பு பள்ளிக்காலம் தந்த தமிழ் ஆசிரியர் இரவி வாத்தியுடன் சந்திப்பும். பின் சில தாமதங்களும் என் சின்ன வயது வேகம்... மாஸ்ரரை நேரச் சந்திப்பதற்கு மனம் உந்த...வேலை நேரத்தின் சின்ன ஓய்வு நேரத்தில் 20 பென்ஸ்போடும் தொலைபேசியில் வேலைத்தளத்திலிருந்தே அழைத்தேன். கதைத்தேன் அவருடன். பல கேள்விகள்.... பதில்கள்... நிறைவாக ‘சரி வாரும் ஒரு மணிக்கு, வந்து சந்தியும்‘ ...மனம் முழுக்க மகிழ்வு... பதட்டம்...பல ஏக்கம்....சந்திப்பு நிகழ்ந்தது. சந்தர்ப்பமும் கிடைத்தது. ..(சிறி அண்ணையின் சிறு பயிற்சியும் கிடைத்தது)மாஸ்ரர் அவர்களின் மனம் நிறை வாழ்த்தும் கிடைத்தது. ....இன்னும் என் வானொலியின் தேடலுடன் இன்றும் என் பயணம்......மனம் நிறைந்த மகிழ்ச்சி மாஸ்ரர். உங்கள் நாடகப் பயிற்சியில் இணையவில்லை என்றாலும் ஊடகப்பட்டறையில் இணைந்த மகிழ்வே மகிழ்வு!... உங்களை வாழ்த்த வயது போதாவிட்டாலும்... என் முகப்பக்கத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். - நேசமுடன்...
( நன்றி- கானா பிரபா)
அன்றிரவு நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர் நானும் கிட்டுவும் நீண்ட நேரம் அந்த இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் அந்தப் பாடலால் நிறையக் கவரப்பட்டிருந்தார் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அவர் எங்களுக்கு கட்டாயாமாக ஒரு வானொலி ஒன்று வேணும் என்று சொன்னார். மக்களிடம் கொண்டு செல்வதற்கு நல்லதொரு ஊடகம் வேணும் என்றார். அந்த நேரம் எங்களிடம் வசதிகள் இருக்கவில்லை. பிறகு கிட்டுவும் மறைந்து போனார். அதற்குப் பிறகு இந்த இணையம் வந்து வசதிகள் எல்லாம் ஏற்பட்ட பிற்பாடுதான் தொண்ணூற்றியேழில் குறைந்த செலவில ஒரு வானொலியை தொடக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். அப்பொழுது என்னுடைய சில நண்பர்களையும், ஞானரட்னசிங்கம் விக்கினராஜா ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு ஐ.பி.சி தமிழ் வானொலியைத் தொடக்கினோம். ஐரோப்பாவில் இலவசமாக அந்த வானொலி ஒலிபரப்பானது. அது இலங்கையையும் எட்டியது. இந்த வானொலி ஐரோப்பாவில் ஒரு தனித்துவத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றுதான் கூறுவேன். பி.பி.சியை பொறுத்தமட்டிடல் சங்கரண்ணா, அவர் எனக்குத் தந்த பயிற்சி ஒரு ஊடகத்தில் பேசுவதற்கான பயிற்சி அது மிகச் சிறந்தது. இனி தமிழ் என்று எனக்கு நல்ல கற்பித்தலைத் தந்தது என்றால் என்னுடைய பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியர் செல்வநாயகம் பேராசிரியர் சதாசிவம் இவர்கள் எல்லாம் வருகிறார்கள். கவித்துவத் தமிழ் எனக்குத் தந்ததென்றால் முதலில் மகாகவி, முருகையன், சில்லையூர் செல்வராஐன். அதன் பின்னர் நாடகத் தமிழோடு எனக்கு நல்லறிவைத் தந்த மதிப்புக்குரிய கண்ணியவான் குழந்தை சண்முகலிங்கம்;. இனி நான் இந்தியாவில் இருந்த காலத்தில் அதாவது அலுவலக வேலையாக பி.பி.சி நிறுவனத்திற்காக நான் அங்க போயிருந்தேன். அப்பொழுது ஐந்து ஆறு மாத காலத்தில் என்னோடு கூடி எனக்கு நிறைய உதவி புரிந்த மங்கை, ரி.ஆர்.எஸ்.வி இவர்களெல்லாம் எனது மொழியைத் துலக்கினார்கள். எனது பேச்சு வழக்கை துலக்கினார்கள் எனது சிந்தனையை துலக்கினார்கள். அதன் பின்னர் நான் சிறிது காலம் ரி.ரி.என் தொலைக்காட்சியில்கூட அதன் பணிப்பாளராக இருந்தேன். தயாரிப்புத்துறைப் பணிப்பாளராக. அதன் பின்னர் இப்பொழுது தமிழ்க் குடில் என்னும் இணைய வானொலி. ஐ.பி.சி யால் வெளியே வந்த பின்னர் தமிழ்க் குடிலைத் தொடக்கினேன்......

வணக்கம் அன்புள்ளங்களே!


================================================

              வணக்கம் அன்புள்ளங்களே!






இனி வரும் நாட்களில்
என்மனதில் பட்டதை ,
நடந்ததை,
நடப்பதை ,
நடக்கப்போவதை...
என பலதையும் பகிர விரும்புகிறேன் .

விருப்பிருப்பின் படியுங்கள், பகிருங்கள்.

(தவறுகள்,குறைகள் இருப்பின் உரிமையுடன் சொல்லுங்கள்.)

தனிப்பட்ட கருத்துக்களுக்கு.
nesamudan@gmail.com


================================================

ஆழப்புதைந்தது அழ ஆரம்பிக்கிறது.

0000000000000000

1.         100 ரூபா...!



அப்ப...  நல்ல குதூகலமான நாட்கள். என் மனம் உல்லாசமாக உலாவந்த காலங்கள்.


வயசு அப்பிடி, குரல் மாற்றமடையிற உணர்வு. கழுத்துக்கு கீழ குரல் வளை தடவிப்பாத்து அது புடமிட்டிருக்கோணும் எண்ட  ஆசை..சும்மா சொல்லக் கூடாது , பெரியாக்கள் சொல்லுவினம்.. ‘எண்ணம் பெரிசு.. ...‘ அப்பிடித்தான்.
ஆரென்ன சொன்னா என்ன? எனக்குள்ள ஒரு தனி நினைப்பு .

அண்ணேன்ர  சயிக்கிள்  எண்டு நினைக்கிறன்.எப்பிடியோ எனக்கு சொந்தமான காலம். அதுக்கு தேங்காண்ணை போட்டு துடைக்கிறதும். ரிம் நல்லா மினுமினுக்க போட்டு தேக்கிறதும், மக்காட்ட தேக்கிறதுமெண்டு, நான் சயிக்கிளுக்கு செய்த வேலை..சயிக்கிளுக்கு அது கொடுமையா இருந்திருக்குமோ?

அப்ப  செலவுக்கு காசு தந்தாத்தான் உண்டு. இல்லாட்டி  சும்மா  எடுப்புத்தான். அதுக்கும் ஒண்டு சொல்லுவினம். ஆளுக்கு எடுப்புத்தான் குளிப்பில்லை எண்டு.  ஆனா  அது  எனக்குப் பொருந்தாது . நல்லா குளிச்சு ரெண்டு தடவையெண்டாலும் சோப்பு போடுவமில்ல..

அப்ப யென்ர சயிக்கிள எடுத்து அந்தக் குச்சொழுங்கை எல்லாம் என்ர ஆட்ச்சி யெண்ட நினைப்பு. சும்மா  சொல்லக்கூடாது  நல்ல ஓட்டம். சில வேளை கலேர்ஸ் காட்ட ரெண்டு கையையும் விட்டிட்டெல்லாம் ஓட்டம்தான்.

அப்ப  என்னமோ ஒரு இருவது ரூபா  இருந்தா  கொத்தும், இறைச்சி றோசும்,சாப்பிட்டு சர்பத்தும் குடிக்கத்தான் மனம் விரும்பும். அதென்னமோ தெரியேல்ல... தேத்தண்ணிக்கடைப்பக்கம் போனா..கொத்து போடுறாளப்பார்க்கிறதும். அந்தாள்  மாக் குளைக்கிற விதமும். பேந்து விசுக்கிற விசுக்கும், கொத்துப்போடேக்க எணை்ணையைத் தெளிச்சு  ஆரம்பிக்கறதும், கொத்து போடேக்க எழுற சத்தமும்...எனக்கு பாக்கிறதில அலாதிப்பிரியம்.
அது மட்டுமில்ல  யாரும் என்ன செய்தாலும் கவணிக்கிறது என்ர பழக்கம் எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன். ஏனெண்டா எப்பவும் ஏமலாந்து பார்க்கிறது. ஒருக்கா பிலாக்கு பாத்து றோட்டில நிண்ட சையிக்கிளில இடிபட்டனெண்டா பாருங்கோவன். அம்மா ‘ ஈசன் பிராக்குப்பாக்காம வாப்பு ..‘     எண்டு சொல்லுறதும் இதுக்குத்தான்.

சும்மா ஒரு கதைக்கு நூறு ரூபா கிடைச்சா  எப்பிடி இருக்கும்.  நான் என்ன செய்வனெண்டும் இப்ப உங்களுக்குத் தெரியும்.....ஓமோம் ..நீங்க நினைக்கிறது சரி.. அதோட நூறுரூபாக்கும் கொத்தே சாப்பிடும் இந்தாள் எண்டு நினைக்கிறயள். பின்ன ...

கிடைச்சுது ...அண்டைக்கு கிடைச்சுது  நூறு ரூபா!  என்னாலயே  நம்பேலாமப்போச்செண்டா உங்களால நம்பேலுமே.. . நடந்துச்சு.  என்ர நீண்ட நாள் அண்டைய ஆசை.. தனியாப்போய்  நல்ல சாத்து சாத்தோனுமெண்டு நினைச்ச எனக்கு ...என்னட்டை நூறு ரூபா!!

என்ர,  தேங்காண்ணை  தேய்ச்ச மினு மினுக்கின்ற  சயிக்கிளில மாமி வீட்ட போய்க்கொண்டிருந்தன்.  அந்தக் குச்சொழுங்கை...கல்லு றோட்டு ... நல்ல ஸ்டையிலான ஓட்டம். அந்த நினைப்பு...அங்கற்ரா ஏதோ காசு போல... அட நூறு ரூபா போல..அட நூறு ரூபா... ஒருத்தரும் வரேல்ல எண்றிறதை உறுதிசெய்து கொண்டே  சும்மா குதிச்சு இறங்கி எடுக்கிறன்.  என்ன குதூகலம். கொத்து ரொட்டி சர்பத் எல்லாம் வந்து வந்து போகுது. வாய் ஊறவே தொடங்கீற்றுது எண்டா பாருங்கோவன். அப்ப எந்த நினைப்பும் வரேல்ல!

வருமோ நீங்களே சொல்லுங்கோவன். இப்பிடி உங்களுக்கு கீழ கிடந்து  காசு கிடைச்சா இப்ப என்ன செய்வீங்கள். சரி அப்ப என்ன செய்திருப்பீங்கள்.

நேர சயிக்கிள் பறக்குது ... மானிப்பாய் ...சந்தையடி..தேத்தண்ணிக்கடை.

!!!!!!!!
100 ரூபா!!!
சந்தனப் பொட்டு வைத்து சிரித்த முகத்துடன் வரவேற்கும் மானிப்பாய் ...சந்தையடி..தேத்தண்ணிக்கடை. சற்குணம் அண்ணை.அவர் இந்திய இராணுவக்காலப்பகுதியில் சொந்தக்கடையில், கடைக்குள்ளுக்குள்ளேயே  வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். சின்னண்ணையிடனம் கேட்டு பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டேன்)001.
!!!!!

தேத்தண்ணிக்கடை ... சுத்திப்பார்கிறன். தெரிஞ்சாக்கள் யாரும் சொந்த முகங்கள்..... இல்லை ....இல்லவே இல்லை. நல்ல காலமடா என்க்கு. இண்டைக்கு. பேந்தென் ன ஓடர் பறக்குது.  நல்ல பசி வேற.. சொல்லவே வேணும் . பல நாள் ஆசை. கெடு. வலுங்கல் எண்டு பேர் இருக்கு. எல்லாத்தையும் நிரூபிக்க நல்ல நாள் எனக்கு?

ப்புபுபு நல்ல சுப்பரான கொத்து ரொட்டி. என்ன டேஸ்டாப்பா. றோஸ் சும்மா தூக்கல்.அண்டைக்கு எல்லாம் ஆசைக்கு எல்லாத்திலயும் ஓடர் வேற. அண்டைக்கெண்டு என்ர வழமையான ஆள் ஓராள்  நிண்டால இன்னும் வசதி. நல்ல வெட்டு. நூறு ரூபாவில திருவிழா..பரிமாறினாளுக்கு வேற டிப்சு...

ஓருமாதிரி  என் அன்றைய ஆசைக்ககனவு பலிச்சது... எதையும் நினைக்கத்தோன்றுமா? எதுவும் தோண்றேல்ல.

எல்லாம் முடிந்த குதூகலம்.  அதே ஒழுங்கையால் , மாலைநேரம் என் சயிக்கிள் மீண்டும் ... கல்லு றோட்டு ...

(தொடரும்...)

கமலின்....

கமலின் ‘விஸ்வரூபம்‘
சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம் என அறிந்த நிலையிருந்து...
கமலின் ‘விஸ்வரூபம்‘ தமிழ்த்திரையுலக வளர்ச்சியில், தொழில்நுட்ப போக்கில் பார்க்கக் கூடிய திரைப்படம்..
( உள்ளார்ந்த கருத்துக்கள், கமலின் ஏனைய பார்வைகள் இவைபற்றி நிறைய எழுதலாம்.)
(ஈழத்தமிழர் பற்றிய அவரது நிலைப்பாடு ...... புன்னகை மன்னனில் அவரது குரலில் வரும் சில கருத்துக்கள்...  அடுத்து . தெனாலிராமன், அடுத்து .மன்மதன் அம்பு..  என சில படங்களில்...வரும் நிலைப்பாடுகள்.)
அதற்கும் அப்பால் கலைப்படைப்பாய் பார்க்கும்போது கமல் பாராட்டப்படும் இடத்தில்.
...சகலகலா வல்லவன் திரைப்படம் பாரத்ததற்கும் இதற்குமான வித்தியாசம் ஏராளம்.(காரணம் என் அனுபவத்தில் அப்படம்தான் எனக்கு  கமலின் முதற்படம். அதைப்பார்த்து அந்தப்பாடலுக்கு நான்  ..இளமை இதோ.. நடனமாடிய ஞாபகங்கள். )

ஒவ்வொருவரின் எண்ண வெளிப்பாடுகள்,உள்மன உணர்வுகள், கருத்தியல் வெளிகள், வெவ்வேறானவை என்ற வகையில்தான் ...பல நிகழ்வுகள் அதற்கான எதிர்வலைகள் வருகிறது... அது எல்லா இடத்திலும் உருவாகக் கூடியதே. ஆனால் அவை மேலும் மேலும் அழிவுகளை உருவாக்குவது கவலைக்குரியது. அறிவு வளரச்சியில் ஒருவருடைய அறிவுப்போக்கில் மாறுபடுவது இயல்பே...(நெருப்பு சுடும்...என்பதிலிருந்து..)
 மற்றவர்களை அழித்துவிடாத...அடிமைப்படுத்தாத, கேவலப்படுத்தாத, அதேவேயைில் உள்ளதை உள்ளபடி கூறுதல், நியாயப்பாடுகளை வெளியிடல் என்பது கருத்துரிமைக்குரியது. 
மதிப்புமிகு வெளிப்பாடுகள், உள்நோக்கின்றி வெளிவருதல் வரவேற்கத்தக்கது...
(உதாரணம்... வீதியில் உள்ள கல்லை எடுத்து நன்மை செய்ய நினைத்து எடுத்து எறிந்தாராம் ஒருவர்.எறிந்தவிட்டு அவர் போய்விட்டார்.  ஆனால் அந்தகல்லில் அகப்பட்டு இறந்ததாம் ஒரு தவளை. அது அவருக்குத் தெரியாமலே..)

கலைப்பற்றாளர்...


தம்பியா...!
நீ...சும்மா போடா...
ஈசா...
நீங்க...

உடன் பிறவாத அக்கா...
உடன் பணி செய்த அறிவிப்பாளர்..
திறமைகள் ...ஜொலிக்கும்..
நேர்த்திறன் பேணல்...
எழுத்து அழகு......
அன்பு கொண்ட பழகும் தன்மை...
உரிமையான கோபம்...
சில வேளை வெறுப்பு...
மென்மையான மனம்....

உங்களுடன் நானும்
ஓர் தம்பியாய்...
கலைப்பணியிலும்...இணைந்த காலங்கள்.
செய்திவாசிப்பில் கவனம் - உச்சரிப்பு...
ஆங்கில உச்சரிப்புகளை சொல்லி
இப்பிடி உச்சரியடா தம்பியா...
உரிமையுடனான திருத்தம்
சக தோழமையுடன்...
...

அப்பப்ப நல்ல பம்பல் ,பகிடிகள்..
விளம்பரம் தயாரிக்கையில்...
வயதில் குறைந்தவானாக இருந்தாலும்
நினைத்தபடி.. கேட்டதற்கினங்க
படைப்பாற்றல் பகிறல்
நிகழ்ச்சித் தயாரிப்பில்...

எதைச்சொல்ல...

தகவல் அறிந்த வினாடி முதல்...
என்ன நடக்குது என்று தெரியாமல்...
எத்தனை நாட்கள் ....

கலைப்பற்றாளர்...
நாட்டுப்பற்றாளர்....
அண்ணன் பற்றாளர்..

காற்றலையில் கலந்த
குரலோசை காலத்திலும் ஒலிக்கும்
ஆத்மா சாந்தி கொள்க...

குடும்பத்தினருக்கு ஆறுதலடைய காலம் கைகொடுக்கட்டும்.
அகவணக்கம்.









காலம் வரும்போது ஒலிக்கும்!




என் உயிரினும் மேலான
என் தமிழன்னையை, வல்லமையை வணங்கி
உலகத்தமிழின முகவரியின் சிகரம்,
மண்ணின் மாணிக்கங்கள் அனைவரையும் நினைந்து
காலத்தாய்க்கு மகிழ்வு தெரிவித்து
அன்புள்ளங்கள் அனைவரையும்
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்
வானலைகளில் அதே உரிமையுடன்சந்திக்கும் மகிழ்வுடன்

நேசமுடன் ஈஸ்வரதாசன்.

வணக்கம் எம் தமிழ் அன்புள்ளங்களே!

காலம் வரும்போது ஒலிக்கும் என்று கூறியதன்படி

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்,

உங்கள் அபிமானம் பெற்ற ஊடகவியலாளர்கள், தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், ஒலிபரப்பாளர்கள் துறைசார் கலைஞர்கள் ,படைப்பாளிகள்
அனைவiரையும் இணைத்து, இணைந்து
இலக்கு நோக்கிய பாதையில் பயணிக்கும் தொடர் பயணம் உறுதியாக ஆரம்பம்.

எதிர்காலத் தலைமுறையினருக்கான, வழியமைத்து மொழி,கலை, கலாச்சார மற்றும தொழில்நுட்ப வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் பயணம் தொடர்கிறது.

காலச்சுழற்சியில் பல ,இன்னல்கள்,பல இழப்புக்கள்,அனைத்தையும் கடந்து உறுதியுடன் நம்பிக்கையுடன் காலத்தாயின் கைத்தாங்கலில் கம்பீரமாக ஒலிக்கும்

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்.

ஆரம்பம் முதல் இன்றுவரை எம்முடன் உளமாரப் பயணிக்கும் நேயர்கள், வர்த்தகப்பெருந்தகைகள், அன்புள்ளங்கள் அனைவரதும் கைகளை ,இறுகப் பற்றி நிற்கிறோம்.

ஐபிசி தமிழ் அன்னை மீண்டும் எங்கள் கைகளில்.

வளர்போம் , பாதுகாப்போம்.

முன்னரைவிட அதிகபலமான ஆதரவினை எதிர்பார்த்து ,இணைகிறோம்.

இடையூறுகளைத் தவிர்த்து இணையும் கைகளையே எதிர்பார்க்கிறோம்.

எமக்கான தேவைகள் பலவே!

அது உங்கள் பலமே!

எதை எதிர்பார்த்தோமோ அதை காலத்தாய் எம்மிடம் தந்துள்ளாள்.

தாகமாக எதைக்கொண்டுள்ளோமோ அதற்காக அயராது பணி தொடர்வோம். என உறுதியெடுப்போம்.

உழைப்போம் உறுதிகொள்வோம்.

நேசமுடன்...
10.02.14

உரிமைக் கவியின் குரலெங்கே?

                                                               உரிமைக் கவியின் குரலெங்கே?



வெள்ளை நிற முடியழகன்,
வெத்தலைச் சப்பலின் சுவைஞனவன்!
ஈழக் குரலின் கவிஞனவன்!
கானவில்லை கானவில்லை கவலையிலவன்! 


அன்றொருநாள் கல்யாண வீடொன்று
போனேன் நான்!
அங்கு வந்தவர் பலர்!
பாலாண்ணன், அன்ரி, அவர்களுடன் இவர்!


சிகரங்களாயினும்அருகே போவதில்லை
அது என் பழக்கமாம்.
ஆனால் கண்படு தூரமாயினும் 
கதைக்க எத்துவதில்லை!


இன்றும் நினைவிருக்கு ....

இரும்பறையண்ணனின்
இருமணவிழா!!
இரும்பறை இன்னும்
இந்தியச் சுவர்சுழ்
 இருட்டறையில்...??
இதுவேறகதை!

புதுமைதந்த புதுவை
இரத்தினமின்னும் மின்னவில்லை!
மின்னலாய் மறை(த்)ந்த கதை
யாருக்குத் தெரியும்?

ஊரை உலகறிய வைத்தான்!
உலைக்களம் கவிக்களம் வைத்தான்!
உலகைக் கூவியே அழைத்தவன்
உரிமைக் கவியின் குரலெங்கே?

பூவரசும் புலினிக்குஞ்சும்
தேடுதங்கே!
புதுவைக் கவியரசன் போனதெங்கே!
கத்தியழைத்தும் காணவில்லை
நாவரண்டு போனதிங்கே!

பொங் தமிழ் குரலெடுத்து
பொங்கவிட்டாய்! -அகில
மெங்கு மதிலால் தங்கவிட்டாய்
ஏங்க விட்டே - எமை
யேனோ தவிக்கவிட்டாய்!

ஐய!
வா ஐய!
உன் கவி தா ஐய!