.

அனைத்துலகத்தமிழோசை!

என் காலப்பதிவுகள் மட்டும்.

சனி, 16 மே, 2015கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?...ஓ...ஓ..ஓ..
அன்றங்கு அழிந்தது தேசம்..
அனைத்தையுமே பார்த்தது உலகம்!
கொன்றங்கே குவித்தனர் மோசம்..
கொடுமையிலும் கொடுமையம்மா!!!
அன்னை முன் பிள்ளைகளும்...
பிள்ளை முன் பெற்றவரும்..
துடிதுடித்து உயிர்துறந்தார்....
ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது....
கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?.
வெண்பனிக் காட்டிடை வந்தோம்
எம்பணி செய்திட மறந்தோம்?
கண்டதையும் கதைத்துக்கொண்டோம்
குழுக்குழுவாய் பிளவும் கண்டோம்
இன்றும் நிலை மாறவும் இல்லை
அங்கும் துயர் ஓயவுமில்லை.....
ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது....
கண்ணிருந்தும் குருடானோம்...
காதிருந்தும் செவிடானோம்....
மாண்ட வரை மறந்திடலாமோ?
மண்ணு ரிமை இழந்திடலாமோ?.
வென்றபகை வீரர் படை
கொண்டவர்கள் தமிழர் நாமே!
நேர்மைகொள் போர் வீரம்
தலைவன் வழி சென்றவர் தாமே!
துரோகம் சூழ்ச்சி சூழ்ந்ததனாலே..
யாவும் இங்கு அழிந்தது அம்மா!
தர்மம் இங்கு வெல்லுமென்றால்..
வெல்லும் வரை சென்று வெல்வோம்....

கருத்துகள் இல்லை: