ஆழப்புதைந்தது அழ ஆரம்பிக்கிறது.
================================================
வணக்கம் அன்புள்ளங்களே!
இனி வரும் நாட்களில்
என்மனதில் பட்டதை ,
நடந்ததை,
நடப்பதை ,
நடக்கப்போவதை...
என பலதையும் பகிர விரும்புகிறேன் .
விருப்பிருப்பின் படியுங்கள், பகிருங்கள்.
(தவறுகள்,குறைகள் இருப்பின் உரிமையுடன் சொல்லுங்கள்.)
தனிப்பட்ட கருத்துக்களுக்கு.
nesamudan@gmail.com
================================================ இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டில்... ஐபிசி தமிழ் வழங்கிய இளம் இன்னிசைக்குரல்... ஒரு நினைவுத் துளி....
Video streaming by Ustream
============================================

தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் ... ஒரு விளம்பரம். இரட்டை வேடம்.
==========================================
வயசு அப்பிடி, குரல் மாற்றமடையிற உணர்வு. கழுத்துக்கு கீழ குரல் வளை தடவிப்பாத்து அது புடமிட்டிருக்கோணும் எண்ட ஆசை..சும்மா சொல்லக் கூடாது , பெரியாக்கள் சொல்லுவினம்.. ‘எண்ணம் பெரிசு.. ...‘ அப்பிடித்தான்.
ஆரென்ன சொன்னா என்ன? எனக்குள்ள ஒரு தனி நினைப்பு .
அண்ணேன்ர சயிக்கிள் எண்டு நினைக்கிறன்.எப்பிடியோ எனக்கு சொந்தமான காலம். அதுக்கு தேங்காண்ணை போட்டு துடைக்கிறதும். ரிம் நல்லா மினுமினுக்க போட்டு தேக்கிறதும், மக்காட்ட தேக்கிறதுமெண்டு, நான் சயிக்கிளுக்கு செய்த வேலை..சயிக்கிளுக்கு அது கொடுமையா இருந்திருக்குமோ?
அப்ப செலவுக்கு காசு தந்தாத்தான் உண்டு. இல்லாட்டி சும்மா எடுப்புத்தான். அதுக்கும் ஒண்டு சொல்லுவினம். ஆளுக்கு எடுப்புத்தான் குளிப்பில்லை எண்டு. ஆனா அது எனக்குப் பொருந்தாது . நல்லா குளிச்சு ரெண்டு தடவையெண்டாலும் சோப்பு போடுவமில்ல..
அப்ப யென்ர சயிக்கிள எடுத்து அந்தக் குச்சொழுங்கை எல்லாம் என்ர ஆட்ச்சி யெண்ட நினைப்பு. சும்மா சொல்லக்கூடாது நல்ல ஓட்டம். சில வேளை கலேர்ஸ் காட்ட ரெண்டு கையையும் விட்டிட்டெல்லாம் ஓட்டம்தான்.
அப்ப என்னமோ ஒரு இருவது ரூபா இருந்தா கொத்தும், இறைச்சி றோசும்,சாப்பிட்டு சர்பத்தும் குடிக்கத்தான் மனம் விரும்பும். அதென்னமோ தெரியேல்ல... தேத்தண்ணிக்கடைப்பக்கம் போனா..கொத்து போடுறாளப்பார்க்கிறதும். அந்தாள் மாக் குளைக்கிற விதமும். பேந்து விசுக்கிற விசுக்கும், கொத்துப்போடேக்க எணை்ணையைத் தெளிச்சு ஆரம்பிக்கறதும், கொத்து போடேக்க எழுற சத்தமும்...எனக்கு பாக்கிறதில அலாதிப்பிரியம்.
அது மட்டுமில்ல யாரும் என்ன செய்தாலும் கவணிக்கிறது என்ர பழக்கம் எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன். ஏனெண்டா எப்பவும் ஏமலாந்து பார்க்கிறது. ஒருக்கா பிலாக்கு பாத்து றோட்டில நிண்ட சையிக்கிளில இடிபட்டனெண்டா பாருங்கோவன். அம்மா ‘ ஈசன் பிராக்குப்பாக்காம வாப்பு ..‘ எண்டு சொல்லுறதும் இதுக்குத்தான்.
சும்மா ஒரு கதைக்கு நூறு ரூபா கிடைச்சா எப்பிடி இருக்கும். நான் என்ன செய்வனெண்டும் இப்ப உங்களுக்குத் தெரியும்.....ஓமோம் ..நீங்க நினைக்கிறது சரி.. அதோட நூறுரூபாக்கும் கொத்தே சாப்பிடும் இந்தாள் எண்டு நினைக்கிறயள். பின்ன ...
கிடைச்சுது ...அண்டைக்கு கிடைச்சுது நூறு ரூபா! என்னாலயே நம்பேலாமப்போச்செண்டா உங்களால நம்பேலுமே.. . நடந்துச்சு. என்ர நீண்ட நாள் அண்டைய ஆசை.. தனியாப்போய் நல்ல சாத்து சாத்தோனுமெண்டு நினைச்ச எனக்கு ...என்னட்டை நூறு ரூபா!!
என்ர, தேங்காண்ணை தேய்ச்ச மினு மினுக்கின்ற சயிக்கிளில மாமி வீட்ட போய்க்கொண்டிருந்தன். அந்தக் குச்சொழுங்கை...கல்லு றோட்டு ... நல்ல ஸ்டையிலான ஓட்டம். அந்த நினைப்பு...அங்கற்ரா ஏதோ காசு போல... அட நூறு ரூபா போல..அட நூறு ரூபா... ஒருத்தரும் வரேல்ல எண்றிறதை உறுதிசெய்து கொண்டே சும்மா குதிச்சு இறங்கி எடுக்கிறன். என்ன குதூகலம். கொத்து ரொட்டி சர்பத் எல்லாம் வந்து வந்து போகுது. வாய் ஊறவே தொடங்கீற்றுது எண்டா பாருங்கோவன். அப்ப எந்த நினைப்பும் வரேல்ல!
வருமோ நீங்களே சொல்லுங்கோவன். இப்பிடி உங்களுக்கு கீழ கிடந்து காசு கிடைச்சா இப்ப என்ன செய்வீங்கள். சரி அப்ப என்ன செய்திருப்பீங்கள்.
நேர சயிக்கிள் பறக்குது ... மானிப்பாய் ...சந்தையடி..தேத்தண்ணிக்கடை.
!!!!!!!!
100 ரூபா!!!
சந்தனப் பொட்டு வைத்து சிரித்த முகத்துடன் வரவேற்கும் மானிப்பாய் ...சந்தையடி..தேத்தண்ணிக்கடை. சற்குணம் அண்ணை.அவர் இந்திய இராணுவக்காலப்பகுதியில் சொந்தக்கடையில், கடைக்குள்ளுக்குள்ளேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். சின்னண்ணையிடனம் கேட்டு பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டேன்)001.
!!!!!
தேத்தண்ணிக்கடை ... சுத்திப்பார்கிறன். தெரிஞ்சாக்கள் யாரும் சொந்த முகங்கள்..... இல்லை ....இல்லவே இல்லை. நல்ல காலமடா என்க்கு. இண்டைக்கு. பேந்தென் ன ஓடர் பறக்குது. நல்ல பசி வேற.. சொல்லவே வேணும் . பல நாள் ஆசை. கெடு. வலுங்கல் எண்டு பேர் இருக்கு. எல்லாத்தையும் நிரூபிக்க நல்ல நாள் எனக்கு?
ப்புபுபு நல்ல சுப்பரான கொத்து ரொட்டி. என்ன டேஸ்டாப்பா. றோஸ் சும்மா தூக்கல்.அண்டைக்கு எல்லாம் ஆசைக்கு எல்லாத்திலயும் ஓடர் வேற. அண்டைக்கெண்டு என்ர வழமையான ஆள் ஓராள் நிண்டால இன்னும் வசதி. நல்ல வெட்டு. நூறு ரூபாவில திருவிழா..பரிமாறினாளுக்கு வேற டிப்சு...
ஓருமாதிரி என் அன்றைய ஆசைக்ககனவு பலிச்சது... எதையும் நினைக்கத்தோன்றுமா? எதுவும் தோண்றேல்ல.
எல்லாம் முடிந்த குதூகலம். அதே ஒழுங்கையால் , மாலைநேரம் என் சயிக்கிள் மீண்டும் ... கல்லு றோட்டு ...
(தொடரும்...)

0000000000000000
1. 100 ரூபா...!
அப்ப... நல்ல குதூகலமான நாட்கள். என் மனம் உல்லாசமாக உலாவந்த காலங்கள்.